Follow Us:

சுசி கணேசனை ஞாபகம் இருக்கா?.. அவரோட அடுத்தப் பட ஷூட்டிங்கையே முடிச்சிட்டாராம்!..

சுசி கணேசனை ஞாபகம் இருக்கா?.. அவரோட அடுத்தப் பட ஷூட்டிங்கையே முடிச்சிட்டாராம்!..

கந்தசாமி, திருட்டு பயலே போன்ற பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன் தனது அடுத்த திரைப்படத்திற்கு ’ஒரண்ட’ என வித்தியாசமான தலைப்பை அறிவித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தான் இயக்கிய பல படங்களில் ஒரண்ட திரைப்படம் மட்டுமே தனது பிறந்தநாளில் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பு நிறைவு விழாவையும் படக்குழுவினருடன் இணைந்து கொண்டாடியது நீண்ட நாட்களுக்கு நினைவில் நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதை போல படத்தின் கதைக்களம், கதாபாத்திரங்கள், ஃபஸ்ட் லுக் போஸ்டர், டீசர் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் சுசி கணேசன் வெளியிடவில்லை. ‘ஒரண்ட’ என்ற ஒரே தலைப்பை மட்டும் அறிமுகப்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை உருவாக்கியுள்ளார்.

படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகுமா? ஃபஸ்ட் லுக் மற்றும் டீசர் எப்போது வெளியாகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சுசி கணேசனை ஞாபகம் இருக்கா?.. அவரோட அடுத்தப் பட ஷூட்டிங்கையே முடிச்சிட்டாராம்!.. | CineReporters