நீ பிச்சை எடுக்கப் போறடா!.. சரவணனிடம் சொன்ன டி.ராஜேந்தர்!.. பிளாஷ்பேக்!..
சரவணனுக்கு ஜோசியம் சொன்ன டி.ராஜேந்தர்

90களில் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்தவர் நடிகர் சரவணன். இவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் சேலம் சரவணன் என அழைக்கப்பட்டார். இவருக்கு நிறைய ரசிகர் மன்றங்களும் அப்போது உருவானது. ஒரு சாயலில் விஜயகாந்தை போலவே இருப்பதால் ரசிகர்களுக்கும் இவரை பிடித்துப் போனது. சரவணன் தொடர்ந்து பல படங்களிலும் எடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்..
ஆனால் திடீரென சில படங்கள் சறுக்கவே சரவணன் காணாமல் போனார். நடுவில் இருவது வருடங்களுக்கு மேல் அவரை திரைப்படங்களில் பார்க்கவே முடியவில்லை அதன் பின்னர்தான் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்து கம் பேக் கொடுத்தார் அதன் ரசிகர்கள் இவரை சித்தப்பு என அழைக்க தொடங்கினர் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்தும் வருகிறார்..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார். ‘என்னுடைய 26 வயதிலேயே நான் டி.ஆர் சாரோட பெற்றெடுத்த பிள்ளை படத்துல நடிச்சேன்.. அப்ப அவர் என்கிட்ட உச்சனை உச்சம் பார்த்தால் பிச்சை எடுப்பாய்.. நீ பிச்சை எடுக்கப் போறடா’ என சொன்னார்..
என்ன இப்படி சொல்றீங்க? என் கைல இப்ப 13 படம் இருக்குன்னு சொன்னேன்.. எல்லா படமும் இருக்கும்.. ஆனா ஒருத்தன் கூட வரமாட்டான் என்று சொன்னார்.. அவர் சொன்ன மாதிரியே 29 வயதுக்கு அப்புறம் வீட்ல உக்காந்தேன்.. அப்புறம் 40 வயசுக்கு மேலதான் நீ நல்லா இருப்பன்னு சொன்னாங்க.. அதே மாதிரி என்னுடைய 40 வயதில்தான் பருத்திவீரன் வெளியானது’ என கூறியிருக்கிறார். நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் ஜோதிடம் தெரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..












