பாரதிராஜாவிடம் ஆசையாக கேட்ட எம்.ஜி.ஆர்!.. கடைசி வரை நிறைவேறாமல் போன சோகம்!…

சினிமாவில் பெரிய அளவில் சாதித்த கலைஞர்களுக்கும் கூட சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. தமிழ் திரையுலகில் உச்சம் தொட்ட எம்.ஜி.ஆருக்கும் இது பொருந்தும். நாடகங்களில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த அவர் பல தமிழ் மற்றும் ஆங்கில நாவல்களை படமாக்கி நடித்திருக்கிறார். துவக்கத்தில் அவர் நடித்தது எல்லாமே சரித்திர கால மன்னர்கள் படம்தான். அந்த கெட்டப் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருத்தமாகவும் இருக்கும். அவர் முதன் முதலில் தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்திலும் அப்படித்தான் நடித்தார். … Read more

500 ரூபாய் வாங்கி கொண்டு நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!.. அவரையே கோபப்பட வச்ச தயாரிப்பாளர்!..

தமிழ் திரையுலகில் 5 வயது முதல் நடித்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். 60 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் கலைஞர் அவர். குழந்தை நட்சத்திரம், நடன இயக்குனரிடம் உதவியாளர், துணை நடிகர், கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சொந்தமாக பல திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஹே ராம், மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். தேவர் … Read more

குணா படம் உருவானபோது நடந்த அடிதடி!.. கமல் படங்களில் ஜனகராஜ் நடிக்காமல் போனதன் பின்னணி!..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திரம் என கலக்கியவர்தான் ஜனகராஜ். 1978ம் வருடம் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். 80,90களில் பல ரஜினி, கமல் படங்களில் ஜனகராஜ் நடித்திருக்கிறார். ரஜினியுடன் சிவா, வீரா, பாட்ஷா, அருணாச்சலம், அண்ணாமலை, படிக்காதவன் என பல படங்களில் நடித்திருக்கிறார். கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகி இப்போதுவரை பேசப்படும் நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் அசத்தலாக … Read more

இத்தனை கோடி வசூலா?!. முதல் மலையாள திரைப்படம்!.. தமிழகத்தில் வசூலை அள்ளும் மஞ்சுமெல் பாய்ஸ்!..

தமிழ் திரையுலகில் அவ்வப்போது மற்ற மொழி திரைப்படங்களும் திடீரென எல்லோராலும் பேசப்பட்டு வசூலை அள்ளும். குறிப்பாக தெலுங்கு படங்கள் பல வருடங்களாக தமிழி மொழி மாற்றம் செய்யப்பட்டு வசூலை பெற்று வருகிறது. இது வைஜெயந்தி ஐபிஎஸ் படத்திலிருந்து தொடர்கிறது. பல வருடங்களாகவே தெலுங்கு படங்கள் தமிழகத்தில் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வருகிறது. அப்படி வெளியான பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களும் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், கன்னட படங்களான கேஜிஎப், காந்தாரா, … Read more

அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும்!. இசைஞானியிடம் கேட்ட கமல்!. குணா பட பாடல் உருவானது இப்படித்தான்!.

கமல்ஹாசன் உருவாக்கிய கதைதான் குணா. பாலகுமாரன் வசனம் எழுத சந்தானபாரதி இயக்கிய இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் தன்னை சிவனாக பாவித்து கொள்கிறான். மேலும், கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணை பார்வதி என நினைத்து அவளை திருமணம் செய்வதற்காக கடத்திகொண்டு போய் விடுகிறான். மலை உச்சியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைக்கிறான். ஒருபக்கம், அந்த பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க நினைக்கும் ஒரு கூட்டமும், மற்றொரு பக்கம் போலீஸ் அதிகாரிகளும் அந்த … Read more

குணா படத்தில் இளையராஜா செய்த மேஜிக்!.. ஷாக் கொடுத்த சந்தானபாரதி!.. இதெல்லாம் நம்பவே முடியலயே!..

திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை செய்து வருபவர் கமல்ஹாசன். அப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் குணா. 1991ம் வருடம் வெளியான இந்த திரைப்படத்தை கமலின் நண்பர் சந்தானபாரதி இயக்கியிருந்தார். இந்த படத்தில் இனிமையான பாடல்களை இசைஞானி இளையராஜா கொடுத்திருந்தார். ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனவே, வசூல்ரீதியாக இது வெற்றிப்படமாக அமையவில்லை. ஆனல், கமல் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்த ஒரு படமாகவே குணா படம் இருக்கிறது. இந்த படத்தில் … Read more

வசூலில் பட்டைய கிளப்பும் மஞ்சுமெல் பாய்ஸ்!. தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடியா?!..

திடீர் திடீரென மற்றமொழி திரைப்படங்கள் தமிழகத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று பரபரப்பாக பேசப்படுவதோடு வசூலையும் அள்ளிவிடும். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் அப்படத்தை பற்றி சிலாகித்து பேச துவங்கிவிடுவார்கள். அப்படித்தான் இப்போது கடந்த 22ம் தேதி வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழ் சினிமா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. சந்தானபாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1991ம் வருடம் வெளியான திரைப்படம்தான் குணா. இந்த படத்தில் ஒரு குகையில் தனது காதலியை … Read more

உங்க பாட்டு பிடிக்கல!.. ஆனா தலைப்பு கிடைச்சிடுச்சி!.. கண்ணதாசனை டீலில் விட்ட கமல்ஹாசன்!..

கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என 60களில் திரையுலகை கலக்கியவர் கவிஞர் கண்ணதாசன். சில சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களில் கதை, வசனம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் முதன் முதலாக தயாரித்து, இயக்கி நடித்த நாடோடி மன்னன் படத்தில் வசனம் எழுதியவர் கண்ணதாசன்தான். அதேபோல், கண்ணதாசன் வசனம் எழுதிய முதல் படமான ‘இல்லற ஜோதி’யில் ஹீரோவாக நடித்தவர் சிவாஜி கணேசன். அதன்பின் சிவாஜியின் சில படங்களுக்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருக்கிறார். ஆனால், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர், தயாரிப்பாளர் … Read more

சிவாஜி நடிப்பு கொஞ்சம் கம்மிதான்!.. கமலிடம் சண்டைபோட்டு வெளியேறிய நடிகர்!.. அட அவரா!..

தமிழ் திரையுலகில் நடிகர் திலகம் சிவாஜி எப்படிப்பட்ட நடிகராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்து நடிப்புக்கே இலக்கணமாக மாறியவர் இவர். இவர் ஏற்காத வேடமே இல்லை என சொல்லுமளவுக்கு பல வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். சாதாரண மனிதர் முதல் கடவுள் அவதாரம் வரை எந்த வேடத்தில் நடித்தாலும் அதுவாகவே மாறிவிடுவார். அதனால்தான் அவருக்கு இப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்னமும் அவரின் நடிப்பை பற்றி முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் சிலாகித்து எழுதுபவர்கள் பலரும் இருக்கிறார்கள். … Read more

ஃபிலிமே இல்லாம ஷூட்டிங்! வடிவேல் காமெடி மாதிரில்ல இருக்கு!. கமலுக்கே விபூதி அடிக்க பார்த்த பாரதிராஜா!

தமிழ் திரையுலகம் பல இயக்குனர்களை பார்த்திருக்கிறது. ஆனால், அதில் தடம் பதித்துவிட்டு போன இயக்குனர்கள் சிலர்தான். அவர்களின் படைப்புகள் மட்டுமே காலத்தை கடந்தும் வாழும். எல்லோராலும் எப்போதும் நினைவு கூறப்பட்டு வரும். அறிமுகமாகும் இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக அவர்களின் படங்கள் இருக்கும். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர்தான் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர் இவர். கிராமத்து மனிதர்கள் வாழ்க்கையை அப்படியே தனது படங்களில் பிரதிபலித்தவர் இவர். இதையும் … Read more