Connect with us

Gossip: ரோஜா பட நடிகர் கைதால் கலக்கத்தில் இருக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்… இதெல்லாம் ரொம்ப தப்பும்மா!

latest news

Gossip: ரோஜா பட நடிகர் கைதால் கலக்கத்தில் இருக்கும் இரண்டு முன்னணி நடிகைகள்… இதெல்லாம் ரொம்ப தப்பும்மா!

Gossip: தமிழ் சினிமாவில் இதுவரை மூன்றாம் கட்ட நடிகர், நடிகைகள் தான் சர்ச்சையான விஷயங்களில் சிக்குவார்கள். ஆனால் முதல்முறையாக அந்த பெரிய நடிகர் போதை பொருள் பிரச்னையில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது.

அதிலும் இந்த நடிகர் பெயர் அடிப்பட்ட போது அவர் ரொம்ப அமைதியான ஆள். பேட்டிகளில் கூட தத்துவமா பேசுவாரு. அவருக்கெல்லாம் இந்த பழக்கமே இருக்காது. சும்மா சர்ச்சைக்காக பெயரை போட்டு விட்டு இருக்காங்க என்பது பலரின் எண்ணமாக இருந்தது.

ஆனால் அந்த நடிகரை பல மணி நேரம் வச்சி விசாரிச்சதிலேயே ஆமாங்கையா என மொத்தமாக ஒப்புக்கொண்டார். அதிலும் அந்த போதை பொருள் ஒருமுறை பயன்படுத்தினாலே ஆறுமாதம் இருக்குமாம். ஆனால் இவரோ கடந்த வாரம் வரை பயன்படுத்தியதால் வாய்ப்பே இல்லாமல் சிக்கிவிட்டார்.

அல்வா போல பேசினாலும் தேவையே இல்லாத வேலையால் தற்போது சிறைச்சாலையில் இருக்கிறார். ஆனால் இவர் போகும்போதே நான் மட்டும் பயன்படுத்தவே இல்லை. என்னுடன் பழகிய நடிகர்கள், நடிகைகளுக்கு பார்ட்டி வைத்து கொடுத்தேன் என போட்டிவிட்டார்.

அதில் ஒரு நடிகர் பெயர் கசிந்துவிட்ட நிலையில் இன்னும் சில முன்னணி நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருக்கிறாராம். சமீபத்தில் வெளியான சூப்பர் படத்தில் இரண்டு டாப் ஸ்டார்களுடன் நடித்த ஒரு நடிகையும், மச்சான்ஸ் புகழ் நடிகையும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவருமே இந்த நடிகருக்கு ரொம்பவே நெருக்கமாம். இவர்கள் பெயர்களும் தற்போது விசாரணையில் இணைய இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இந்த நடிகர் பார்ட்டியில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறதாம்.

அவர்களின் பெயரை வைத்து ரத்த டெஸ்ட் எடுத்தாலே பலர் இதில் சிக்கிவிடுவார் என நம்பப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மிகப்பெரிய லிஸ்ட் வெளிவரும் என்றும் அது கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top