அப்பா விழாக்களில் முந்திரிக்கொட்டை வேலை செய்யும் நடிகைகள்… இவருக்கு அவர் பரவாயில்லயே!

by ராம் சுதன் |

டாக்டருக்கு படிக்க போய் நடிக்க வந்து இப்போ சும்மா இருக்காமல் தன்னுடைய பட விழாவில் ஆடிய அந்த நடிகை மீது இயக்குனர் தந்தை கடுப்பில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிப்பட்டு வருகிறது.

சமீபகாலமாகவே பாலிவுட்டை போல கோலிவுட்டிலும் நெப்போட்டிசம் அதிகரித்துள்ளது. நடிக்க தெரிந்த இள நடிகர், நடிகைகளை வாய்ப்பு கொடுக்காமல் மோசமாக நடிக்கும் தங்கள் வாரிசை களமிறக்கி திட்டு வாங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். 90களில் மிகப் பிரபலமான அந்த தாத்தா திரைப்படத்தின் இரண்டாவது சீசன் இன்று வெளியாகி இருக்கிறது.

கடந்து சில வாரங்களாக இப்படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் நடந்தது. ஒரு பக்கம் படக்குழு வரிசையாக பேட்டி கொடுத்து சில சர்ச்சைகள் உருவான நிலையில், அவர்கள் வாரிசுகளும் தங்களால் முடிந்த வெடியை தந்தைகளின் படத்திற்கு கொளுத்தி போட்டு சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது.

பெரும்பாலும் சினிமா விழாக்களில் படக்குழு மட்டுமே கலந்து கொள்வார்கள். சிலர் ப்ரோமோஷனுக்காக பிரபல நடிகர்களையும் மேடையில் ஏற்றி பெர்ஃபார்மன்ஸ் செய்ய சொல்வதும் வழக்கம் தான். இதை கையில் எடுத்த தாத்தா திரைப்பட குழு அவர்களின் வாரிசுகளை பாட களம் இறக்கி இருக்கின்றனர்.

இதில் அப்பா பெயரை காப்பாற்ற சங்கீத நடிகை லவ்வாக பாடி பெயரை காப்பாற்றிக்கொண்டார். அவர் ஏற்கனவே நிறைய பாடல்களை பாடி ரசிகர்களிடம் புகழ்பெற்றிருந்ததாலும் இந்த விழாவில் அவருக்கு மேலும் ஒரு சிறப்பும் ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர். அதற்கு காரணம் விழாவில் பங்கெடுத்த இன்னொரு நடிகை தான்.

அந்த பிரம்மாண்ட இயக்குனரின் மகள் சமீபகாலமாக கோலிவுட்டில் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த ரொம்பவே படாத பாடு பட்டு வருகிறார். இதனால் தன்னுடைய தந்தை விழாவில் நானும் பாடல் பாடுவேன் என களமிறங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே அவருடைய பாடல் ஒன்றுக்கு சில சர்ச்சைகள் கிளம்பிய நிலையில் தற்போது இதுவும் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குனர் பொண்ணு பாட்டுக்கு பதிலா ஹீரோ பெண் பாட்டை பரவால்ல என சொல்லும் அளவுக்கு ரசிகர்களும் அவரை சமூக வலைதளங்களில் மோசமாக கலாய்த்து வருகின்றனர். விழாவில் கூட இயக்குனர் தந்தை மகளின் நிகழ்ச்சியை காணும் போது கடுகடும் முகத்துடன் இருந்ததும் தற்போது இணையத்தில் மீம் கண்டண்ட்டாக மாறி இருப்பது படக்குழுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story