ரோகிணியை வச்சு செஞ்ச வித்யா… முத்துவுக்கு கிடைத்த அடுத்த ஆதாரம்.. நடக்குமா?
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய தொகுப்புகள்.
ஸ்டேஷனில் முத்துவிடம் கான்ஸ்டபிள் நீ இன்னைக்கு தப்பிச்சிட்ட. இன்னொரு பிரச்னையில மாட்டுவ. அன்னைக்கு உன்ன உள்ள தூக்கி வைப்பேன் என்கிறார். நான் நியாயத்தை நம்பி உழைக்கிறேன் என சவால் விடுகிறார் முத்து. அப்போ அங்கு வரும் கான்ஸ்டபிளிடம் எதுக்கு மனோஜை அடிச்சீங்க என்கிறார்.
அதற்கு அவரும் கோபத்தில் முத்துவிடம் மனோஜ் சொன்ன விஷயத்தை கூறுகிறார். இதைக் கேட்ட முத்து நீங்க அவனை அடிச்சதுல தப்பே இல்லை என்கிறார். மீனாவிடம் அதை கூறி முத்து சிரித்துக் கொண்டிருக்கிறார். பாட்டிக்கு ரத்தம் கொடுத்த வீடியோ குறித்து தூரத்து உறவினர் ஒருவர் பார்த்துவிட்டு அவர்களை அழைத்துச் செல்ல வருகிறார்.
பாட்டி மற்றும் தாத்தாவிற்கு சொந்தங்கள் கிடைத்துவிட்டதை நினைத்து முத்து மற்றும் மீனா சந்தோஷப்படுகின்றனர். இருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது தாத்தா தன்னிடம் இருந்த மொபைலை எடுத்து முத்துவிடம் கொடுத்து இதை ஒரு பொண்ணு தவற விட்டதாக சொல்லிக் கொடுத்துவிட்டு செல்கிறார்.
வீட்டிற்கு ஒரு முத்து அண்ணாமலையிடம் விஷயத்தை அவரும் சந்தோஷம் அடைகிறார். பின்னர் முத்து, மனோஜ் போலீஸ் ஸ்டேஷனில் நடந்து கொண்ட விஷயத்தை கூற அதைக் கேட்டு அதிர்ச்சியாகும் அண்ணாமலை மனோஜை அடித்து விடுகிறார். விஜயா என்ன நடந்தது எனக் கேட்க அண்ணாமலை சொல்லாமல் விடுகிறார்.
ரூமிற்குள் செல்லும் முத்து அந்த மொபைலிற்கு சார்ஜ் போட அவர்கள் போட்டோ வருகிறது. இது அண்ணாமலையிடம் கூட விஜயா உங்களுக்கு மட்டும் தொலைஞ்சதெல்லாம் கிடைக்குது என்கிறார். நல்லவங்களுக்கு அப்படித்தான் என முத்து கூற அப்ப மனோஜ் நல்லவன் இல்லையா என விஜயா கேட்கிறார்.
இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை ரூமில் இருந்து ஒட்டி கேட்கும் ரோகிணி வித்யா மீது கோபப்படுகிறார். நேராக அவரை பார்க்க வந்து போனை எங்க தூக்கி போட்ட எனக் கேட்கிறார். வித்யா மாற்றி சொல்ல நீ எதுக்கும் லாயக்கில்லை. நீ எல்லாம் வேஸ்ட் என பேசுகிறார் ரோகிணி.
இதை கேட்டு கோபமடையும் வித்யா நான் உன்னோட ப்ரெண்ட், என்னமோ வேலைக்காரி மாதிரி கேள்வி கேட்கிறார். பொய் சொல்றத பத்தி நீ பேசக்கூடாது. உன்னை சுத்தி இருக்கிற எல்லாரையும் ஏமாத்துற. நாளைக்கு உன் வாழ்க்கையை காப்பாத்திக்க என்ன கூட ஏமாற்றுவா என அதிர்ச்சி கொடுக்கிறார்.