சர்வைவர் பைனலில் என்ன நடந்தது? காணாமல் போன ஹார்ட் டிஸ்க்? பிரபல நடிகை விஜி சொன்ன உண்மைகள்!

X

Survivor: தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிக்பாஸை போல சர்வைவரும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் முதல் சீசனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இதற்கு காரணம் தற்போது முதல் சீசன் வின்னர் விஜி சொல்லும் விஷயமாக தான் இருக்கும் என நம்பப்படுகிறது.

ஒரு தீவில் எந்தவித அடிப்படை தேவைகளும் இல்லாமல் வாழ வேண்டும். அங்கு போட்டிகள் நடக்கும். தோல்வி அடைந்த போட்டியாளர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். இப்படி ஒவ்வொருவராக விளையாடி கடைசியில் இருக்கும் போட்டியாளர்களில் வாக்கு மூலம் வின்னர் தேர்வு செய்யபடுவார்.

இப்படி தொடங்கப்பட்ட முதல் சீசனை பிரபல நடிகர் அர்ஜூன் சர்ஜா தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் ஸ்ருஸ்தி டாங்கே, இந்திரஜா சங்கர், விஜயலட்சுமி, நந்தா துரைராஜ், அம்சத் கான், இனிகோ பிரபாகரன், விக்ராந்த், நாராயணன், உமாபதி, சரண், காயத்ரி, வனேசா, ராம், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதில் பல கட்ட போட்டிகளை தாண்டி பிரபல நடிகையும் அகத்தியனின் மகளுமா விஜயலட்சுமி டைட்டிலை தட்டினார். ஆனால் அவரை ரசிகர்கள் சுயநலவாதி உமாபதியை ஏமாற்றிய பின்னரே டைட்டிலை வாங்கினார். இதில் நியாயமில்லை என பலரும் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் டைட்டில் வின்னரான விஜி தன்னுடைய பைனல் சமயத்தில் நடந்த விஷயத்தினை வெளியிட்டு இருக்கிறார். அதில், பைனலுக்கு சில வாரம் முன்னர் நாங்கள் மெயின் தீவில் இருந்தோம். அப்போ அர்ஜூன் சார் எங்களிடம் கோவிட் டெஸ்ட் எடுத்தீங்களா எனக் கேட்டார்.

அப்போதுதான் மூன்றாவது அலை முடிந்த நேரம், போட்டியாளர்கள் உட்பட மற்ற ஊழியர்களும் ஸ்வாப் டெஸ்ட் செய்துக் கொண்டோம். இதில் உமாபதி, விக்ராந்த், வனேசாவுக்கு தொற்று உறுதியானது. வீட்டை விட்டு தள்ளி இருந்தோம். திடீரென இந்த பிரச்னையால் எல்லாருக்கும் பதட்டம் உண்டானது.

எல்லாரும் பதட்டமாக இருந்தனர். நந்தா, சரண் மற்றும் ஐஸ்வர்யா தனி தீவில் இஉர்த்ந்தால் அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. போட்டி நிறுத்தப்பட்டது. எங்களை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று டெஸ்ட் எடுத்து கசாயம், சாப்பாடு உள்பட எல்லா சேவைகளும் தந்தனர். ஆனால் எதுவும் எங்களுக்கு அமைதியை தரவில்லை.

இரண்டு நாள்கள் அந்த அறையில் இருந்தோம். எங்களுக்கு அது சிறை போல இருந்தது. பாதிக்கப்பட்டவர்களை தவிர்த்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதே அவர்கள் திட்டம். எல்லாருக்குமே வீட்டிற்கு போக வேண்டும் போல இருந்தது. அதிலும் நான் என் கணவரிடம் பேச வேண்டும் என்ற தவிப்பில் இருந்தேன்.

நானும், லேடி கேஸும் ஒரு அறையில் இருப்போம். பக்கத்து அறையில் விக்ராந்த் மற்றும் உமா இருந்தனர். அவர்களிடம் நாங்க பேசும்போது, நாங்க நிகழ்ச்சியை விட்டு விலக இருக்கோம். நீங்களும் அப்படியே செய்யுங்க. ஒற்றுமையா இருக்கணும் என்றார்கள்.

ஆனால் குழு எங்களை தொடர்ந்து வலியுறுத்தியது. நான் நோ சொல்லிக்கொண்டே இருந்தேன். முக்கிய நிர்வாகி ஒருவர் என்னை பார்த்து இரண்டு நாட்கள் நிகழ்ச்சியை நிறுத்தியதற்கே நிர்வாகத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் என்றார். இதை நிறுத்தினால் பெரிய பிரச்னையாக முடியும். உதவி செய்யுங்கள் என்றார்.

மற்ற தொழிலாளர்களின் கதையையும் எங்களிடம் சொன்னார்கள். எமோஷனல் பிளாக்மெயிலால் எங்களை உடைத்தனர். நான் குழம்பினேன். என் வீட்டினரை சமாதானம் செய்ய யோசித்தேன். அர்ஜூன் சாரும் எங்களிடம் பேசினார். லேடி கேஷ் வெளியேறினார். நான் என் கணவரை சமாதானம் செய்தேன்.

ஆனால் என் கணவர் அதெல்லாம் எனக்கு கவலை இல்லை. நீ உடனே கிளம்பியாக வேண்டும் என கறாராக சொல்லினார். ஆனால் கடைசி கவுன்சில் மீட்டிங்கிற்கு ஒருநாள் இருந்தது. என் டீமில் நால்வர் இல்லாததால் என்னை ஈசியாக டார்கெட் வைத்து தூக்கிவிட்டனர்.

நான் ஜட்ஜாகி போனை வாங்கிவிடுவேன் என்றேன். ஆனால் என் கணவர் புரியுது. உன்னால் ஜெயிக்க முடியாது. யாரோ ஒருத்தர் வெற்றி பெற நீ கை தட்ட அங்கு இருக்க வேண்டியதில்லை என்றார். இருந்தும் அவரை சமாதானம் செய்தேன்.

குழுவிடன் நான் பைனலிஸ்ட் ஆக முடியுமா எனக் கேட்டேன். ஆனால் அவர்கள் அதற்கு நாங்க உறுதி தர முடியாது என்றனர். இந்த எபிசோட்கள் ஒளிபரப்பானபோது, கதை எனக்கு எதிராக மாறிவிட்டது. என்னை ஏமாற்றுக்காரர் என சித்தரிக்கத் தொடங்கினார்கள்.

உண்மையை நிரூபிக்கும் மிக முக்கியமான ஒரு வீடியோ கிளிப்பை அவர்கள் காட்டவே இல்லை. நான் அதை பற்றி குழுவிடம் கேள்வி கேட்டபோது, அந்த டேப் காணாமல் போய்விட்டதாக சொன்னார்கள். அந்த எடிட்டிங் எனக்கு சமூக ஊடகங்களில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது.

சத்தியமா சொல்றேன், ஒவ்வொரு ஸ்கிரிப்ட்டுக்கும் ஒரு வில்லன் தேவை. ‘சர்வைவர்ல’ என்னை விட வலிமையான வில்லன் வேறு யார் இருக்கா?அதனால்தான், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். வில்லனாக நடிக்க. ஒரு வகையில் அது கூட ஒரு மரியாதைதான் என்றார்.

View this post on Instagram

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

View this post on Instagram

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)