Cinema News
வெங்கட் பிரபு தொடங்கி விட்டது… விஜய் ரூட்டையே ஃபாலோ செய்யும் ரஜினிகாந்த்… இந்த விஷயமுமா?
Thalaivar171: கோலிவுட்டில் ஒருவர் ஒன்றை செய்துவிட்டால் போதும் அதை அப்படியே ஃபாலோ செய்யும் கூட்டம் தான் அதிகம். அப்படி ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு கதை பிரபலமாகும். அப்படி தான் தற்போது ஒரு விஷயத்தினை எல்லாரும் ஃபாலோ செய்ய தொடங்கிவிட்டனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம். இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். இதையெல்லாம் விட படத்தில் விஜயின் டி ஏஜிங் டெக்னிக் தான் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: ரஜினி கேட்ட சம்பளம்.. வாய்ப்பை வேறொரு நடிகருக்கு கொடுத்த இயக்குனர்! அப்படி என்ன கேட்டார்?
தற்போது அதே ட்ரெண்ட்டை தலைவர்171 படத்திலும் பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. வெகுவிரைவில் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை முடிக்கும் ரஜினிகாந்த், லோகேஷின் தலைவர்171 படத்தில் இணைய இருக்கிறார். அப்படத்தின் ப்ரீ புரோடக்ஷன் பணிகளும் முடியும் நிலைக்கு வந்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, சில ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில், இப்படத்தில் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் ஷேட் வேடமே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டி ஏஜிங்கில் ரஜினியை உருவாக்கவும் ப்ளான் செய்து இருக்கிறார்களாம்.
ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்படும் எனவும் தெரிகிறது. ரஜினிகாந்த் கேரியரில் இந்த படம் மாதிரி ஒரு கதையில் அவர் நடித்ததே இல்லையாம். அனிருத் இசையில் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதும் அடுத்த வருடம் படம் ரிலீஸாகும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டிரைவர் திருமணத்திற்கு பணம் கொடுத்த ரஜினி!.. அதுல சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான் ஹைலைட்!..