வெளியானது தளபதி 69 பட அறிவிப்பு!. இசையமைப்பாளர் யார் தெரியுமா?!...

by சிவா |   ( Updated:2024-07-01 09:10:31  )
vijay
X

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். ரசிகர்கள் அவரை தளபதி என அழைக்கிறார்கள். விஜயின் படங்கள் எப்போதும் வசூலை வாரிக்குவித்து வருகிறது. அவர் நடிப்பில் வெளியான வாரிசு மற்றும் லியோ ஆகிய படங்கள் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது.

லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். மகன் விஜயை டெக்னாலஜி உதவியுடம் மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்கள். இதற்காக அமெரிக்காவில் உள்ள கலைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: இத வச்சிதான் அஜித்தை அடிக்கணும்!. வெறிகொண்டு வேலை பாக்கும் வெங்கட்பிரபு!.. இதுதான் விஷயம்!..

அதோடு விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த் போன்றவர்களும் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதுவரை 2 பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கோட் திரைப்படம் விஜயின் 68வது திரைப்படமாகும். எனவே, அடுத்து விஜய் யாரின் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது. அட்லி, ஒரு தெலுங்கு பட இயக்குனர், ஹெச்.வினோத் என பலரின் பெயரும் அடிபட்டது. இறுதியில் ஹெச்.வினோத் இயக்குகிறார் என செய்திகள் வெளியானது.

vijay

இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவது உறுதியானது. மேலும், இப்படத்தை கேவிஎன் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதும் உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் நிறுவனமே தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறார். ஹெச்.வினோத் - அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் திரைப்படம் இது. ஒருபக்கம், இப்படத்தில் சமந்தா நடிக்கிறார் எனவும் செய்திகள் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story