Home latest news Ajith: சொந்த செலவில் புரோமோஷன் தேடும் AK! அபுதாபியில் குவியும் திரைப்பிரபலங்கள்

Ajith: சொந்த செலவில் புரோமோஷன் தேடும் AK! அபுதாபியில் குவியும் திரைப்பிரபலங்கள்

ajith
ajith

அஜித் குமாரை தற்போது திரைப்பிரபலங்கள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள். அபுதாபியில் நடக்கும் ரேஸில் அஜித் தன்னுடைய அணியுடன் கலந்து கொண்டு வருகிறார். இதற்கு முன் துபாயிலும் நடந்த ரேஸில் தன் அணியுடன் கலந்து மூன்றாம் இடத்தை பிடித்தார் அஜித். இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார் அஜித். அதுவரை கார் ரேஸ் மீது ஆர்வம் காட்டாத ரசிகர்கள் அஜித் ரேஸில் மும்முரமாக இறங்கிய பிறகு ரசிகர்களும் ரேஸை பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் அபுதாபியில் நடக்கும் ரேஸில் அஜித் தன்னுடைய அணியுடன் தீவிரமாக ஈடுபட்டு வருகையில் அவரை திரைப்பிரபலங்கள் பலரும் சந்தித்துவிட்டு செல்கின்றனர். ஒரே நாளில் சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, பிரியா வாரியார் என முன்னணி கலைஞர்கள் சந்தித்தனர். அது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் வைரலானது.

இவர்களுடன் மஞ்சுவாரியாரும் அஜித்தை போய் சந்தித்தார். இப்படி தொடர்ந்து ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் அபுதாபியில் திரண்டு வருகின்றனர். இதற்கு பின்னணியில் என்ன காரணம் என்பதை வலைப்பேச்சு அந்தணன் விளக்கமாக கூறியுள்ளார்.

அதாவது அஜித் அணிக்காக ரிலையன்ஸ் குழுமம் ஸ்பான்சர் செய்திருக்கிறது. அதனால் தங்களுடைய பிராண்டை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக பிரபலங்களை வர வழைத்து புரோமோஷன் செய்ய வேண்டும் என அஜித் அணிக்கு ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபலங்கள் வந்தால்தான் அவர்களை பார்க்க கூட்டமும் வரும்.

அதே சமயம் ரிலையன்ஸ் பிராண்டும் பப்ளிசிட்டி ஆகும். அதனால் அஜித் தரப்பிலிருந்து டிக்கெட் போட்டு பிரபலங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்தணன் கூறியுள்ளார். அதனால்தான் அடுத்தடுத்து பிரபலங்கள் ரேஸ் நடக்கும் இடத்திற்கு வந்த வண்ணம் இருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்.

Previous articleநடிகை மேல பைத்தியமா இருந்த சிம்பு!.. ஷாக்கான டி.ஆர்!… ஒரு பிளாஷ்பேக்!…
Next articleArjun: 29 வயதில் அர்ஜூன் சந்தித்த பிரச்சினைகள்! கை கொடுத்து தூக்கிய மாஸ் ஹிட் படம்