முதலமைச்சர் ஜோசப் விஜய் நேற்று மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக சென்னையிலிருந்து இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்றார். அங்கிருந்து கார் வழியாக அவர் மேட்டூர் சென்றார். அவர் செல்லும் வழியெங்கும் அவருக்கு பொதுமக்களும், விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தண்ணீரை திறந்து வைத்த ஜோசப் விஜய் மேட்டூரில் உள்ள சின்னக்காவூரில் வசிக்கும் விவசாயிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு பாட்டி அவருடன் மிகவும் பாசமாக பழகினார்.. விஜயின் கன்னத்தை வருடி ‘வீட்டுக்கு சாப்பிட வாப்பா’ என்று பாசமாக கூப்பிட்டார்.. விஜய் அவரிடம் ‘சாப்பிட்டு விட்டுதான் பாட்டி வந்தேன்’ என்று கூறினார்.. இதை அந்த பாட்டியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதன்பின் பாட்டியின் கையை பிடித்துக் கொண்டு அந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது தான் அணிந்திருந்த சன் கிளாஸை அந்த பாட்டிக்கு போட்டுவிட்டார் விஜய்.
இதுதொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலானதால் அந்த பாட்டி ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். அவரை பல ஊடகங்களும் சென்று பேட்டி எடுக்கிறார்கள்.. விஜய் என்ன சொன்னார்?.. அவரே கண்ணாடியை போட்டுவிட்டரா? என பல கேள்விகளை கேட்டனர். அதோடு அந்த பாட்டி எங்கு சென்றாலும் விஜய் கொடுத்த கண்ணாடியை அணிந்து கொண்டே செல்கிறார். அதேபோல், அந்த பகுதி தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் ‘விஜய் கொடுத்த கண்ணாடி இது’ என சொல்லி அந்த கண்ணாடியை வாங்கி அணிந்து போட்டோ எடுத்து வருகிறார்கள்.
பாட்டி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் ‘பாட்டியை பார்க்கும்போது எங்களுக்கே பொறாமையாக இருக்கிறது.. பாட்டி ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்’ என்றெல்லாம் பதிவிட்டு வருகிறார்கள்..







