parasakthi

புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகி 3 வாரங்கள் கழித்து அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. ஓடிடி-யில் பார்ப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அதேபோல், தியேட்டரில் வெளியாகி வரவேற்பை பெறாத சில படங்கள் கூட ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெறுவதுண்டு. அந்தவகையில் இந்த வார வெள்ளிக்கிழமை என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதை பார்ப்போம்.

சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து ஜனவரி 10ம் தேதி வெளியான திரைப்படம் பராசக்தி. 1960களில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை இது. ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் வெளியாகிறது என சொன்னதால் விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு இப்படம் ஆளானது.

எனவே, படம் வெளியானபோது படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பினார்கள். ஒருபக்கம், படத்திற்கும் கலவையான விமர்சனங்கள் வந்ததால் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. இந்த படம் வருகிற வெள்ளிக்கிழமை Zee5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. ஓடிடியிலாவது இப்படம் வரவேற்பை பெறுமா என பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

அடுத்து, விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன், சரத்குமார் நடித்து பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த கொம்பு சீவி திரைப்படம் Tentkotta என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படமும் தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஓடிடியில் என்னவாகிறது என பார்ப்போம்.

அடுத்து, தெலுங்கு நடிகர் பிரபாஸ் ஹீரோவோக நடித்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த பேன் இண்டியா படமான ராஜாசாப் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்த படம் ஆந்திராவிலேயே ஓடவில்லை. மொத்தத்தில் தியேட்டரில் ஓடாத 3 படங்களும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது.