Home latest news காதலர் தின ஸ்பெஷல்!.. இந்த வாரம் வெளியாகும் 3 ரீ-ரிலீஸ் திரைப்படங்கள்!….

காதலர் தின ஸ்பெஷல்!.. இந்த வாரம் வெளியாகும் 3 ரீ-ரிலீஸ் திரைப்படங்கள்!….

minnale

பிப்ரவரி 14 என்றாலே காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அன்று காதலர் தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. உலகமெங்கும் உள்ள காதலர்கள் அன்று சந்தித்துக் கொள்வார்கள்.. காதலர்களுக்கு பரிசு கொடுப்பது என அன்பை பரிமாறிக் கொள்ளும் சம்பவங்கள் நிறைய நடைபெறும்..

இந்நிலையில்தான், காதலர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மூன்று பழைய திரைப்படங்கள் ரீ-ரீலீஸ் ஆகவிருக்கிறது. அதில் ஒன்று சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே.. அமீர் இயக்கிய இந்த திரைப்படம் 2002ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, நந்தா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சூர்யாவின் சினிமா கெரியரில் இது முக்கிய படமாக அமைந்தது.

அடுத்து கெளதம் மேனன் முதலில் இயக்கிய மின்னலே திரைப்படமும் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் மாதவன், ரீமாசென், விவேக், நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

அடுத்து கதிர் இயக்கத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்து 1999ம் வருடம் வெளியான காதலர் தினம் திரைப்படம் காதலர் தின விருந்தாக இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியானபோது இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து குறிப்பிடத்தக்கது..

Previous articleArjun: 29 வயதில் அர்ஜூன் சந்தித்த பிரச்சினைகள்! கை கொடுத்து தூக்கிய மாஸ் ஹிட் படம்
Next articleAjith: இது தியேட்டர் இல்ல!. ஒழுங்கா இருங்க!. ரசிகரை திட்டிய அஜித்!… வீடியோ வைரல்!…