Toxic Box office collection: 300 கோடிய தாண்டிடுச்சே!.. டாக்சிக் 6 நாள் வசூல் அப்டேட்..

X
Toxic Box office collection: 300 கோடிய தாண்டிடுச்சே!.. டாக்சிக் 6 நாள் வசூல் அப்டேட்..

உச்சத்திற்கு சென்ற யஷ்: சில நடிகர்களை ஒரே திரைப்படம் உச்சத்திற்கு கொண்டு சென்று விடும். அப்படி KGF,KGF2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி ஓவர் நைட்டில் பேன் இண்டியா ஸ்டார் என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்தவர்தான் கன்னட நடிகர் யஷ். அதிலும் KGF2 திரைப்படம் பல மொழிகளிலும் வெளியாகி 1400 கோடி வரை வசூல் செய்ததாக அப்போது சொல்லப்பட்டது. அந்த படத்திற்கு பின் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த திரைப்படம்தான் டாக்சிக்..

யஷ்ஷின் கடுமையான உழைப்பு: கடந்த நான்கு வருடங்களாக இந்த படத்திற்காக யஷ் கடினமான உழைப்பை போட்டிருந்ததாக சொல்லப்பட்டது. இந்த படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு KGF,KGF2 ஆகிய இரண்டு படங்களுக்கும் இசையமைத்த ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார். டாக்சிக் படத்திற்கு தியேட்டர்களில் அதிக டிக்கெட் விலையும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் யஷ் ரசிகர்கள் ஆர்வமுடம் பம பார்க்க போனார்கள். ஆனால் படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் வர துவங்கியது..

நெகட்டிவ் விமர்சனம்: அதற்குக் காரணம் படத்தில் கதை என ஒன்றுமில்லை.. திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமோ, டிவிஸ்ட்டோ இல்லை.. யஷ் ஸ்டைலாக நடந்து வந்து துப்பாக்கியை எடுத்து யாரையாவது சுடுகிறார்.. அதை முடித்துவிட்டு பெண்களுடன் ஜாலி பண்ணுகிறார் என்பதை தவிர படத்தில் எதுவும் இல்லை என்று பலரும் கூறினார்கள்.. அதேபோல் படத்தின் 3.15 மணி நேர நீளம் ரசிகர்களை சோதித்தது. முன்பதிவு காரணமாக முதல் நாள் இந்தியாவில் 100 கோடி வசூலை தாண்டிய டாக்சிக் திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் படிப்படியாக வசூல் குறைந்து கொண்டே சென்றது.

வசூலில் சரிவு: கடந்த சனிக்கிழமை டாக்ஸிக் திரைப்படம் 25.15 கோடியும், ஞாயிற்றுக்கிழமை 23 கோடியும் வசூல் செய்த நிலையில் நேற்று இந்த படத்தின் வசூலில் சரிவு ஏற்பட்டு 7.45 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. முதல் நாள் வசூலுடன் ஒப்பிடும்போது 6வது நாளில் 67.6 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமையான நேற்று டாக்சிக் திரைப்படம் தமிழ்நாட்டில் 30 லட்சத்தை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மொத்தத்தில் படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் டாக்சிக் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து 304.5 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது..

டாக்சிக் படத்தின் பட்ஜெட்: டாக்சிக் படத்தின் பட்ஜெட் 400 முதல் 500 கோடி வரை இருக்கும் என கருதப்படும் நிலையில் இந்த வார இறுதிக்குள் இந்த திரைப்படம் 350 கோடி வசூல் செய்தாலே பெரிய விஷயம்தான். எனவே இந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுக்கும் எனக்கு கூறப்படுகிறது.. விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை தயாரித்த் கே.வி.என் நிறுவனம்தான் டாக்சிக் படத்தையும் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.