வசுல் மழை பொழிந்த KGF2: KGF, KGF2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் கன்னட சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் யஷ். அதிலும் KGF2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1200 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. KGF2 படத்திற்கு பின் டாக்சிக் என்கிற திரைப்படத்தில் யஷ் நடித்திருந்தார்.
டாக்சிக் திரைப்படம்: இந்த படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் யஷ்ஷின் சகோதரியாக நயன்தாரா நடித்திருக்க கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரோசி, தாரா சுதாரியா போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர்..
நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற டாக்சிக்: ஒருபக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக டாக்சிக் திரைப்படம் உருவாகியிருந்தது. ஆனால் படம் வெளியான போது நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஏனெனில் படம் ரசிகர்களை கவரும்படி இல்லை.. படம் முழுவதும் யாரோ யாரையோ சுட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.. படுக்கையறை காட்சிகள் இருக்கின்றன.. படத்தில் கதை என ஒன்றுமில்லை.. ரசிக்கக்கூடிய திரைக்கதையும் இல்லை என ரசிகர்கள் கூறினார்கள்..
பல கோடி நஷ்டம்: எனவே இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் டாக்சிக் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.313 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதுவும் ஏழாம் நாளான நேற்று டாக்சிக் திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.8 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே இந்த படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனமும், இணைந்து தயாரித்த யஷ்ஷும் பல கோடிகள் நஷ்டமடைந்திருக்கிறார்கள்.







