விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரணபலி’ படத்தின் வெளியீட்டு தேதி விஜய் தேவரகொண்டாவின் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இப்படத்தை இயக்கியுள்ளார். 19ஆம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் ஆட்சிக்கால இந்தியாவை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், வரலாற்று பின்னணியுடன் கூடிய பிரம்மாண்டமான ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வருகிறது.

இதனிடையே, மம்மி பட வில்லன் ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜய் – அதுல் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.
பீரியட் கதைக்களம், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், விஜய் தேவரகொண்டாவின் புதிய தோற்றம், ராஷ்மிகாவுடனான கூட்டணி என பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் உருவாகி வரும் ‘ரணபலி’, பான்-இந்தியா அளவில் வெளியாகும் முக்கியமான படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, வரும் அக்டோபர் 16ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தசரா பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.







