Vijay Sethupathi: பேசுறவங்க பேசிட்டு போகட்டும்!.. வைரலாகும் விஜய் சேதுபதியின் பேட்டி….
விஜய் சேதுபதியின் பழைய பேட்டி வைரல்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. மற்ற நடிகர்களைப் போல பெரிதாக ஹீரோயிசம் செய்யாமல், பன்ச் வசனம் பேசாமல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
ஒருபக்கம், கடந்த சில பிக்பாஸ் சீசன்களில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் விஜய் சேதுபதி பேசியது விஜய் ரசிகர்களையும், தவெக தொண்டர்களை கோபப்படுத்தியது. ‘வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பிரச்சனை, பொறுப்பு என வரும் போது எதிரணியின் மீது பழியை போட்டுவிட்டு தெறித்து ஓடுவது ஒரு தலைமை பண்புக்கான தகுதி இல்லை.. அதை ஏமாற்றும் வேலை’ என அவர் பேசியிருந்தார். தமிழக முதல்வர் விஜயைத்தான் விஜய் சேதுபதி மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் என அவர்கள் புரிந்து கொண்டனர்..
எனவே, சமூக வலைத்தளங்களில் விஜய் சேதுபதிக்கு எதிராக அவர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ‘முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக மட்டுமே அவர் பேசியிருக்கிறார்.. வேறு யாருடனும் தொடர்பு படுத்தி பார்க்க கூடாது’ என விஜய் டிவி நிர்வாகம் விளக்கமளித்தது.
இந்நிலையில்தான் சில வருடங்களுக்கு முன்பு நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதில் ‘ரசிகர்களின் அன்பை சந்தோஷமாக பெற்றுக்கொள்வது போல அவர்களின் வெறுப்பையும் ஏத்துக்கணும்.. அதை ஏற்க முடியாது என சொல்ல முடியாது.. எதிர்ம|றை விமர்சனங்களை எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, விஜய் என பலரும் பார்த்திருக்கிறார்கள். இது எனக்கு மட்டும் நடக்குதுன்னு சொல்ல முடியாது.. அதனால் பேசுறவங்க பேசிட்டு போகட்டும்.. நாம நம்முடைய வேலையை மட்டுமே பார்க்க வேண்டும்’ என அதில் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.












