இத விக்ரம் மட்டும்தான் பண்ண முடியும்! மத்த நடிகர்களால முடியுமா? பதிலடி கொடுத்த நடிகர்

Vikram: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விக்ரம். கமெர்ஷியல் ஹீரோவாக பல வெற்றிகளை கொடுத்தாலும் ஒரு நல்ல நடிகர் என்பதை அவ்வப்போது தன் படங்களின் மூலம் நிருபித்துக் கொண்டே இருக்கிறார். அவரின் நடிப்பில் அதிகளவு எதிர்பார்ப்புடன் இருக்கும் திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தயாரான அந்தப் படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.

படம் இதுவரை இல்லாத அளவில் தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் படமாகக் கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆஸ்கார் விருதுக்கும் விக்ரம் பரிந்துரை செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: திரிஷாவை இப்படியா பண்ணுவீங்க மிஸ்டர் சிரஞ்சீவி… அம்மணியோட டயட்டைக் கெடுத்துட்டீகளே..!

சினிமாவிற்காக தன்னை மிகவும் வருத்தி சினிமாவே உலகம் என்று இருக்கும் நடிகர் விக்ரமை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. சமீபத்தில் விக்ரமிடம் நிருபர் கேட்ட ஒரு கேள்வி பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அஜித், சூர்யா போல் ஏன் உங்களால் டாப் 3ல் வர முடியவில்லை என்ற கேள்வியை அவர் முன் வைத்தனர்.

இந்த கேள்வி விக்ரமை கடுப்பேற்றினாலும் அதற்கு கூலாக பதில் சொல்லி தான் யார் என்பதையும் நிருபித்தார். டாப் 3ல் வந்தால்தான் நடிகர் என்பது இல்லை. சினிமாவில் ஏதாவது ஒரு வகையில் வித்தியாசமான முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம் . ஏன் தூள், சாமி போன்ற படங்கள் எல்லாம் நான் பண்ண வில்லையா?

இதையும் படிங்க: ‘கோட்’ படத்திற்கு வெங்கட் பிரபு சொன்ன புரமோஷன் இதுதானா? இவ்ளோ பெருசா?

அடுத்த கட்டத்திற்கு போகவே நான் இந்த மாதிரியெல்லாம் நடித்து வருகிறேன் என்று பதில் கூறியிருந்தார். இதை பற்றி பிரபல நடிகர் சம்பந்த் கூறும் போது கமெர்ஷியல் படங்களை தாண்டி ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற ஒன்று இருக்கிறது. அதற்கு கச்சிதமாக பொருந்தக் கூடியவர் விக்ரம்.

sampath ram

sampath ram

எத்தனையோ கமெர்ஷியல் படங்கள் பண்ணாலும் இந்த கேரக்டரில் நடித்து விட்டேன் என்ற ஒரு திருப்தி இருக்க வேண்டும். அது கமெர்ஷியல் படத்தில் நடிக்கும் போது கிடைக்காது. அதுவும் தங்கலான் போன்ற படங்களில் இந்தளவு சேலஞ்சான கேரக்டரை ஒரு சிலரால் மட்டும்தான் பண்ண முடியும். சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படங்களை யார் வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் இது விக்ரமால் மட்டும்தான் பண்ண முடியும் என சம்பந்த் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: விஜய் 69 படத்துக்கு ஆப்பு வைத்த கமல்?!.. ஹெச். வினோத் என்ன பண்ணப் போறாரோ!…

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it