Connect with us

Cinema News

இப்படி பண்றதுக்கு முன்னாடி பிரே பண்ண மாட்டாரோ!.. திடீரென கிரவுண்டில் விஷால்.. என்ன பண்றாரு பாருங்க!

நடிகர் விஷால் சாப்பிடுவதற்கு முன்பாக சாமி கும்பிடுவதை சமீபகாலமாக செய்து வருகிறார். அவரது செயலைப் பார்த்து பலரும் பாராட்டாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் சாப்பிடும் போது விஷால் சாமி கும்பிட்டது பார்த்து அவர் அருகே இருந்த யோகிபாபுவே பங்கமாக ரியாக்ஷன் கொடுத்த வீடியோக்கள் வைரலாகின.

இந்நிலையில் தற்போது, கிரவுண்டில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களையும் ஆரோக்கியமாக இருக்க அறிவுறுத்தி உள்ளார். இப்படி உடற்பயிற்சி செய்யும்போது ஏதாவது சாமியை கும்பிட வேண்டுமா விஷால் என நெட்டிசன்கள் அந்த வீடியோவை பார்த்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இந்தியன் 2 ஆடியோ விழாவில் நடந்த குளறுபடி!.. கூட்டத்தை கூட்ட இவ்வளவு கஷ்டப்பட்டாங்களா!..

அவர் எக்ஸர்சஸைஸ் செய்வதே சாமி கும்பிடுவது போலத்தான் உள்ளது என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஹரி இயக்கத்தில் சமீபத்தில் விஷால் நடித்த ரத்னம் திரைப்படம் பார்த்த ரசிகர்களின் கண்களில் ரத்தம் வரும் அளவுக்கு இருந்தது.

தியேட்டருக்கு சென்று பார்க்காத ரசிகர்கள் ஓடிடியில் வெளியான படத்தை ஒருமுறை பார்த்துவிடலாம் என நினைத்து படாத அவஸ்தைப்பட்டு வருகின்றனர். நடிகர் விஷால் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்தியன் தாத்தாவ இப்படி கோமாளியா ஆக்கிட்டாங்களே! அனிருத்துக்கு ஏன் இந்த சின்ன புத்தி?

துப்பறிவாளன் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்கிய நிலையில், அவருடன் விஷால் சண்டை போட்டார். இருவரும் மோசமாக சண்டை போட்டது சினிமா பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் இருவரும் சமீபத்தில் சமாதானம் ஆகிவிட்டதாக அவர்களே பேட்டியில் தெரிவித்தனர்.

பல படங்கள் தோல்வியை தழுவிய நிலையில் கடைசியாக கடந்த ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மட்டும் விஷாலுக்கு வெற்றியைக் கொடுத்தது. அதற்கு காரணம் அந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்றும் அந்தப் படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா தான் என்றும் ரசிகர்கள் சொன்னாலும் விஷாலின் அந்த அனகொண்டா காட்சியை ரசிக்காத ரசிகர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: ஊரே கொண்டாடும் கருடன்! உள்ளுக்குள்ள கதறும் சூரி.. அட இப்படியெல்லாம் நடந்துச்சா?

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/p/C7wZ8mlRKP6/

google news
Continue Reading

More in Cinema News

To Top