இந்த ஆண்டு (2026) ஜூலை மாதம் தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான படம் ‘கட்டா குஸ்தி 2’. இதில் விஷ்ணு விஷால் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இப்படம் சூப்பர் ஹிட்டானது. கடந்த வாரம் ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிரபல OTT தளமான நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸான தமிழ் படம் தான் ‘பியார் பிரேமா கல்யாணம்’.
இளன் இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சான்வி மேகனா நடித்துள்ளார். இதில் இளன் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆக தான் வலம் வருகிறார்.
தற்போது, ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தை பார்த்து ரசித்த நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் “என்ன இளன் ப்ரோ… ஹவுஸ் ஹஸ்பண்ட் சினிமாட்டிக் யுனிவர்ஸ் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படம் மூலம் விரிவடைகிறது போலயே…
நானாவது பார்ட் 2-ல தான் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆனேன். ஆனா, நீங்க முதல் படத்துலேயே ஆயிட்டீங்க. வெல்கம் டு தி கிளப். இந்த ஃபன் எண்டர்டெயினரை ஃபேமிலியுடன் நெட்ஃப்ளிக்ஸில் பார்த்து ரசிங்க மக்களே” என்று பதிவிட்டுள்ளார்.







