சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். வாத்தி, லக்கி பாஸ்கர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு அதாவது ஜில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு ஒரு விண்டேஜ் லுக்கில் சூர்யா இந்த படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி சமீபகாலமாக வரும் அதிரடி ஆச்கன் படங்களுக்கு மத்தியில் ஒரு ஃபீல்குட் படமாக வந்ததால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இப்ப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்றே தெரிகிறது.
இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் ரூ.200 கோடி வசூலை கடந்துள்ளது. கருப்பு படத்திற்கு பின் இப்படமும் சூர்யாவுக்கு வெற்றிப்படமாக் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.







