Homelatest newsWith Love: 2வது நாளிலேயே எகிறிய வசூல்!.. வித் லவ் வசூல் அப்டேட்!..

With Love: 2வது நாளிலேயே எகிறிய வசூல்!.. வித் லவ் வசூல் அப்டேட்!..

தற்போதெல்லாம் புதுமுக நடிகர்கள் நடித்து சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் சூப்பர் ஹிட் அடித்து நல்ல வசூலை கொடுக்கிற.து பெரிய நடிகர்களை வைத்து பல கோடி பட்ஜெட்டில் எடுக்கும் படங்களை விட இந்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுக்கிறது.
அப்படித்தான் டூரிஸ்ட் ஃபேமிலி, சிறை போன்ற படங்கள் வெளியானது. அந்த வரிசையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் தான் வித் லவ்..

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருதார். மேலும், அவருக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். மதன் என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஒரு ஃபீல் குட் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. படம் பார்க்கும் பலருக்கும் தங்களின் பள்ளி கால நினைவுகள் நினைவுக்கு வரும்படி கதை திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள்..

படம் வெளியான வெள்ளிக்கிழமை இந்த திரைப்படம் 1.6 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று இந்த படம் 1.93 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது படம் வெளியாகி இரண்டு நாட்களில் இந்த படம் 3.53 கோடி வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது..

RELATED ARTICLES

Most Popular

Recent Comments