Connect with us

With Love: வசூல் சும்மா அள்ளுதே!.. வித் லவ் 3 நாள் கலெக்‌ஷன் அப்டேட்!..

latest news

With Love: வசூல் சும்மா அள்ளுதே!.. வித் லவ் 3 நாள் கலெக்‌ஷன் அப்டேட்!..

இப்போதெல்லாம் புதுமுக நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட நல்ல கதை அம்சத்தோடு வெளிவந்தால் ரசிகர்கள் அந்த படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். சமீபத்தில் கூட சிறை என்கிற படம் அப்படி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றாதோடு படமும் ஹிட் அடித்தது.

அந்த வரிசையில் வெளியாகியிருக்கும் மற்றொரு படம்தான் வித் லவ். இந்த படத்தில் டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் கதையின் நாயகனாக நடிக்க, கதையின் நாயகியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார்.

பள்ளிப் பருவ காலத்தில் ஏற்பட்ட காதலை இந்த திரைப்படத்தில் அழகாக பிரதிபலித்திருக்கிறார்கள். ஒரு சூப்பர் பீல் குட் திரைப்படமாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது..

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் 1.6 கோடியும், இரண்டாம் நாளில் 2.5 கோடியும், மூன்றாம் நாளான நேற்று 2.51 கோடியும் என மொத்தமாக 6.61 கோடியை படம் வசூல் செய்திப்பதக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

To Top