KGF, KGF2 ஆகிய படங்களில் நடித்து பேன் இந்தியா அளவில் ரசிகர்களிடம் பிரபலானவர் யஷ். KGF2 படத்திற்கு பின் 4 வருடங்கள் கழித்து கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஜனநாயகன் படத்தை தயாரித்த KVN தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. சுமார் 800 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானதாக சொல்லப்படுகிறது.
அப்படி வெளியான டாக்சிக் திரைப்படம் கடந்த ஆகஸ்டு 26ம் தேதி வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாதால் இதுவரை இந்தியாவில் 300 கோடி வசூலை மட்டுமே இப்படம் வசூலித்தது. இத்தனைக்கும், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் இப்படம் வெளியானது.
டாக்சிக் படம் 1600 கோடி வசூல் செய்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு அவர் செலவு செய்த 800 கோடி கிடைக்கும். அதற்கு மேல் வசூல் செய்தால் மட்டுமே அவருக்கு லாபம் கிடைக்கும். ஆனால், இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. எனவே, படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனத்திற்கு பல நூறு கோடி நஷ்டம் வரும் என கணிக்கப்படுகிறது.
இந்த படத்த்தை தமிழில் வெளியிட்ட வினியோகஸ்தருக்கு ரூ.55 கோடி வரை கே.வி.என் நிறுவனம் திருப்பி தரவேண்டுமாம். 125 கோடி கொடுத்து ஆந்திர, தெலுங்கானா உரிமையை வாங்கிய தயாரிப்பாளர் தில் ராஜுவோ யஷ் நடித்துள்ள ராமாயணா படத்தின் ஆந்திர, தெலுங்கானா உரிமையை தனக்கு கொடுத்துவிடுங்கள் என யஷ்ஷிடம் சொல்லிவிட்டாராம். அதேபோல், சிரஞ்சீவியை வைத்து கே.வி. என் நிறுவனம் தற்போது தயாரித்து வரும் படத்தின் ஆந்திரா, தெலுங்கானா பட உரிமையை தனக்கு கொடுத்துவிட வேண்டும் எனவும் சொல்லிவிட்டாராம்.







