கென் கருணாஸின் இமாலய சாதனை: ரூ. 50 கோடியை கடந்த யூத்

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் பட்டையை கிளப்பும் படங்கள் சமீபகாலமாக சாதனை நிகழ்த்தி வருகின்றன. சமீபத்தில் வந்த வித் லவ், தாய் கிழவி வரிசையில் கென் கருணாஸ் நடித்த யூத் படமும் இணைந்துள்ளது. கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் யூத். படம் வெளிவருவதற்கு முன்பே படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் ரூ 5.5 கோடி […]

youth movie

தமிழ் சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வசூலில் பட்டையை கிளப்பும் படங்கள் சமீபகாலமாக சாதனை நிகழ்த்தி வருகின்றன. சமீபத்தில் வந்த வித் லவ், தாய் கிழவி வரிசையில் கென் கருணாஸ் நடித்த யூத் படமும் இணைந்துள்ளது.

கென் கருணாஸ் இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் யூத். படம் வெளிவருவதற்கு முன்பே படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறப்பட்ட நிலையில் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த படம் ரூ 5.5 கோடி செலவில் உருவானது இப்படம்.

யூத் வெளியான முதல் நாளில் சுமார் 3 கோடி ரூபாய் வசூலுடன் தனது கணக்கைத் தொடங்கிய யூத் , பார்வையாளர்களின் பாசிடிவ் விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் அதிகரித்தது.

இந்த நிலையில் படம் வெளியான 11 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 50.26 கோடியை வசூலித்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. படக்குழு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் மிக அதிக லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் ‘யூத்’ முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →