தனுஷ் நடித்த அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆனவர் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்து வெளிவந்துள்ள பட தான் யூத். நேற்று வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பள்ளிப்பருவத்தில் எப்படியாவது ஒரு உண்மையான காதலைக் கண்டுபிடித்துவிட வேண்டும் எனத் துடிக்கும் 15 வயது மாணவனான பிரவீன், அவனது காதல் முயற்சிகள், ஏற்படும் தோல்விகள், மற்றும் இறுதியாக அவன் வாழ்க்கையையும் உண்மையான அன்பையும் எப்படிப் புரிந்து கொள்கிறான் என்பதே ‘யூத்’ படத்தின் மையக்கரு.
கருப்பையா சி.ராம் இன்ற இளைஞர் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். பாடல்கள் ஏற்கெனவே ரீலிஸ்களில் கொண்டாடுகிறார்கள் இளசுகள். இப்படத்தில் கென் கருணாசுடன் அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ் ஆகியோரும், முக்கியக் கதாபாத்திரங்களில் தேவதர்ஷினி மற்றும் மலையாள முன்னணி நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ளனர்.
இந்த நிலையில் யூத் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை sacnilk தளம் வெளியிட்டுள்ளது. ‘யூத்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் நாடு முழுவதும் சுமார் ₹3.20 கோடி நிகர வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதன் முதல் நாள் மொத்தக் கட்டண வசூல் தோராயமாக ₹3.68 கோடியைத் தாண்டும் என கூறப்படுகிறது. தொடர்ந்து 3 தினங்கள் விடுமுறை என்பதால் வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
சமீபத்தில் வெளிவந்து ஹிட் அடித்த வித் லவ் படத்தின் முதல் நாள் வசூல் ரூ 2 கோடி வரை வசூலானது. அந்த வசூலை இப்படம் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





