Cinema News
விஜயுடன் சேர்ந்து நடிப்பேன்.. ஆனா ஒரே கண்டிஷன்!.. பல வருடங்களுக்கு முன்பே பதில் சொன்ன அஜித்..
Vijay ajith: அஜித்தும் விஜயும் ஒரே காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகி நடிக்க துவங்கியவர்கள்தான். விஜயை அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தனது சொந்த காசைப்போட்டு படமெடுத்து கொண்டு வந்தார். ஆனால், பெரிய வெற்றி இல்லை. எனவே, மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று ‘என் மகன் விஜயை வைத்து படமெடுங்கள்’ என உதவி கேட்டார்.
அதேபோல், அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த சரத்குமார், சத்தியராஜ், பார்த்திபன் போன்ற நடிகர்களிடம் சென்று ‘உங்களின் படங்களில் உங்களின் தம்பியாக விஜயை நடிக்க வையுங்கள்’ என்று கூட கேட்டார். யாரும் முன்வரவில்லை. விஜயகாந்த் மட்டுமே அவருக்கு உதவி செய்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அதன்பின் பூவே உனக்காக படம் மூலம் டேக் ஆப் ஆனார் விஜய்.
இதையும் படிங்க: வயசான மாதிரி இருக்கும்! விஜயகாந்த் படத்தில் இருந்து நீக்கப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?
ஒருபக்கம், அமராவதி படம் மூலம் நடிக்க துவங்கிய அஜித் பல படங்களிலும் சாக்லேட் பாயாகவே நடித்தார். பில்லா, மங்காத்தா படங்களின் வெற்றி அவரை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. ஒருகட்டத்தில் ரஜினி – கமல் போல அஜித் – விஜய் இருவரும் போட்டி நடிகர்களாக மாறினர்.
நேரில் சந்தித்தால் சிரித்துக்கொண்டே பேசினாலும் உள்ளுக்குள் இருவருக்கும் பெரிய போட்டி இருக்கிறது. வசூலில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருந்த அஜித் இப்போது சம்பளத்திலும், வியாபாரத்திலும் அவர் விஜயை நெருங்கி வந்துவிட்டார். விஜயின் வாரிசு படம் வெளியான அதேநாளில் தனது துணிவு படத்தையும் வெளியிட்டார்.
இதையும் படிங்க: பொண்ணு படம்னு ரஜினி நடிக்க மாட்டார்!.. அதுக்கு வேற காரணம் இருக்கு.. செந்தில் சொன்ன விஷயம்!..
விஜய் – அஜித் இருவரையும் வைத்து ஒரு படமெடுக்க வேண்டும் என சில இயக்குனர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால், அது நடக்குமா என்பதுதான் தெரியவில்லை. வெங்கட்பிரபு கூட அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்பே ஒரு நிருபர் ‘விஜயுடன் இணைந்து நடிப்பீர்களா?’ என கேட்டதற்கு அஜித் பதில் சொல்லி இருக்கிறார்.
முதலில் விஜய் மற்றும் என்னுடைய ரசிகர்கள் அதுக்கு ஆசைப்படணும். ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற மாதிரி கதை அமையணும். கதை டிமாண்ட் பண்ணா கண்டிபபா நடிப்பேன்’ என அதில் சொல்லி இருக்கிறார் அஜித். இது வழக்கமா எல்லா நடிகர்களும் சொல்வதுதான். ஆனால், இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்பே இல்ல என்பதுதான் நிதர்சனம்.
இதையும் படிங்க: ஹீரோயினை விட இவங்க செம ஹாட்டு!.. ஒரே பாடலில் பேமஸ் ஆன க்யூட் கேள் இவங்கதான்…