அர்ஜூன் வீட்டு திருமணத்தில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? மூணு நாளைக்கு ஒரே ஆட்டம்தான் போங்க

Actor Arjun: டெக்னாலஜி வளர வளர கலாச்சாரமும் மாறிக்கொண்டே வருகின்றது. இந்திய அளவில் பார்க்கும்போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதுவும் தமிழ்நாட்டு கலாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் இப்போது மற்ற மாநிலங்களை பின்பற்றி நம் தமிழ்நாட்டு கலாச்சாரமும் மாறிக்கொண்டு தான் வருகின்றன .

ஒரு திருமணம் என்றால் மேள தாளம் வாழைப்பந்தல் என்றுதான் திருமணங்கள் நடைபெறும். ஆனால் சமீப காலமாக அதனுடைய ட்ரெண்டே மாறிக் கொண்டு வருகின்றது. அதுவும் பிரபலங்கள் வீட்டு திருமணம் என்றால் வட இந்தியா பாரம்பரியத்தை ஒட்டியே திருமணத்தை நடத்த ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் இன்னும் சில நாட்களில் அர்ஜுன் தம்பிராமையா இவர்கள் வீட்டு திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

இதையும் படிங்க: நாங்க கேட்டது.. ஆனால் வந்தது! அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் சூர்யா.. இத எதிர்பார்க்கல

சென்னையில் அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயில் அருகில் இருக்கும் அவருக்கு சொந்தமான இடத்தில் தான் மிக பிரம்மாண்டமாக செட்டு போட்டு அங்கு அவருடைய மகள் திருமணத்தை நடத்த இருக்கிறார். அதற்கான அழைப்பிதழ்கள் கொடுக்கும் படலம் நடந்து கொண்டு வருகின்றது. மகள் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த பல வேலைகளை பார்த்துக் கொண்டு வருகிறார் அர்ஜுன்.

இந்த நிலையில் மாப்பிள்ளை மணப்பெண் இருவரும் சேர்ந்து நடனம் ஆட இருக்கிறார்களாம். அதற்காக தனியாக கொரியோகிராஃபரை ஒப்பந்தம் செய்து அதற்கான ரிகர்ஸலும் நடந்து கொண்டு வருகின்றதாம். இந்த நடனத்திற்கான கொரியோகிராஃபராக சாந்தி மாஸ்டரைத்தான் கமிட் செய்திருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: கார்த்திக் ஹீரோவாக நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது பாவா லட்சுமணனா? இது என்ன புதுசா இருக்கு?

மூன்று நாட்கள் இந்த டான்ஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. திருமணத்தன்று திருமணத்திற்கு முந்தைய நாள் திருமணத்திற்கு அடுத்த நாள் வரவேற்பு என மூன்று நாட்களில் இந்த நடனம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆகவே மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து ஒரே ஆட்டமும் கொண்டாட்டமும் ஆகத்தான் இருக்கப் போகிறார்களாம். இந்த மாதிரி திருமணத்திற்கு தனியாக கொரியாகிராபரை ஒப்பந்தம் செய்து திருமணத்தை நடத்திய பிரபலம் அர்ஜுன் என்ற வகையில் அவரைப் பற்றி இப்போது இணையம் முழுவதும் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

 

Related Articles

Next Story