Gossip: கட்சி நடிகருக்கு ‘நோ’ சொல்லிட்டு… கடைசில இப்படி பண்ணிட்டாரே!

Published on: November 8, 2024
gossip
---Advertisement---

தமிழ்நாட்டோட அடுத்த அரசியல் என்னை சுத்தி தான் என நடிகர் ஆரம்பித்த கட்சி தான் தற்போது டாக் ஆப் தி டவுன். கடைசி படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு விடுவேன் என சூடம் ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக நடிகர் பேசி வருகிறார்.

ஆனால் விஷயம் அறிந்தவர்கள் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். அங்க தோத்தா இங்க வந்துதான் ஆகணும். எத்தனை பேர பாத்திருப்போம் என பஞ்ச் டயலாக் பேசி வருகின்றனர். நடிகரின் தரப்பிலும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: ‘காதல்ல இருக்கேன்’ வெளில போனதும் கல்யாணம்தான்!.. அருண் சொல்லிட்டார்!..

அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை தன்னால் மட்டும்தான் நிரப்ப முடியும் என்ற உச்சபட்ச நம்பிக்கையில்தான் நடிகர் ஆழம் பார்க்க இறங்கி இருக்கிறார். ஒருவேளை முழுகும் நிலை வந்தால் டக்கென ரசிகர்கள் பக்கம் வண்டியை திருப்பு விடுவார். வரிசையாக காத்திருக்கும் நிறுவனங்களை வைத்து மீண்டும் பரமபதம் தொடரும்.

2026 சட்டமன்ற தேர்தலில் அவரின் பலம் தெரிந்து விடும். எனவே அதுவரை தீவிர அரசியலில் நடிகர் வலம் வரலாம். இந்தநிலையில் அவரை கடுப்பேற்றும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடைசி படத்தில் விரும்பிக் கேட்டும் மாட்டவே மாட்டேன் என மறுத்த அந்த வில்லன் நடிகர், சுள்ளான் நடிகரின் டிபன் கடை படத்திற்கு கால்ஷீட்டினை வாரி வழங்கி இருக்கிறாராம்.

சம்பளம் அதிகம் தருவதாக சொல்லியும் நடிக்க மாட்டேன் என்றவர் கடைசியில் இப்படி பண்ணிட்டாரே என, நடிகரின் தரப்பில் புகைச்சல் கிளம்பி இருக்கிறது. அரசியல் படம் என்பதால் தான் நடிக்க மாட்டேன் என வில்லன் நடிகர் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் விஷயம் அதுவல்ல என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கத்தரிக்கா முத்துனா கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகணும்.

இதையும் படிங்க: PradeepAntony: ஓவர் குசும்பு தான்!… திருமணம் முடிந்த கையோட பிரதீப் ஆண்டனி செஞ்ச வேலை… செம வைரல்!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.