நேக்கா இயக்குனரை கோர்த்துவிட்ட சிவகார்த்திகேயன்… பக்காவா ஸ்கெட்ச் போட்டுருக்காரு போலயே…
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் மெரினா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். பின் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் வேலைக்காரன், சீமராஜா போன்ற திரைப்படங்களின் மூலம் தோல்விகளையும் சந்தித்தார்.
பின் பல திரைப்படதோல்விகளுக்குப்பின் இவர் நடித்த மாவீரன் திரைப்படம் இவருக்கு சற்று ஆறுதலை கொடுக்கும்படி இருந்தது. இப்படத்திற்கு பின் இவர் நடித்த திரைப்படம்தான் பொங்கலுக்கு வெளியான அயலான் திரைப்படம். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமான ரவிக்குமார் பல வருடங்களுக்கு பின் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையும் வாசிங்க:இவரே ஒழுங்கில்ல… இன்னொரு நடிகருக்கு வாழ்வு கொடுக்கப்போறாரா?.. விஷாலை பொளந்து கட்டிய பிரபலம்
ஆனால் இப்பட ரிலீஸுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் பலவித சர்ச்சைகளையும் சந்தித்தார். இசையமைப்பாளர் டி.இமான் அளித்த பேட்டியினால் அவர் சில நாட்களாக வெளியே வராமலே இருந்தார். பின் மெல்ல மெல்ல தலையை காட்டவும் தொடங்கினார். முன்னதாக அயலான் பட போஸ்டர் ரிலீஸ் நிகழ்ச்சியில் தான் இப்படத்திற்கு சம்பளமாக எந்தவொரு தொகையையும் வாங்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் அவரது அப்பேச்சுக்கு பின்னர் பல வித காரணங்கள் இருப்பதாக வலைபேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சினிமாவில் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்.டி.ராஜா. ஆனால் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனின் பல திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் பலரும் சிவகார்த்திகேயனிடம் ஆர்.டி.ராஜாவை விட்டு விலகுமாறு கூறியுள்ளதாகவும் அதனால் சிவகார்த்திகேயன் அவரை விட்டு விலகியதாகவும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:அந்த விஷயத்துல மாமனாருக்கு அப்படியே தலைகீழ் மருமகன்!… இப்படி எல்லாமா தனுஷ் செய்வாரு?
மேலும் சிவகார்த்திகேயனின் தோல்வி படங்களால் கிட்டதட்ட 75 கோடி நஷ்டமும் ஏற்பட்டுள்ளதால் அக்கடனை சிவகார்த்திகேயனையே அடைத்து கொள்ளுமாறு ஆர்.டி.ராஜா கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட கடனை அடைக்கவே சிவகார்த்திகேயன் ஆர்.ரவிக்குமாரிடம் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்ததாகவும் மேலும் தன்னுடைய அனைத்து கடனையும் தனது திரைப்படத்தின் இயக்குனரான ஆர்.ரவிக்குமாரே அடைக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போட்டிருந்தாராம்.
ஆனால் இப்படிபட்ட நிலையில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படமும் பெரிதளவில் அவருக்கு கை கொடுக்காததால் இவரால் நஷ்டமடைந்தது இயக்குனர்தான் எனவும் பிஸ்மி தெரிவித்துள்ளார். தான் அடைக்க வேண்டிய கடனை வசமாக தனது திரைப்பட இயக்குனரின் தலையில் திணித்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் உலாவுகின்றன.
இதையும் வாசிங்க:இப்படி ஒரு கேள்வி.. ‘லால் சலாம்’ அரங்கத்தையே அதிர வைத்த அஜித்! விஷ்ணு விஷால் செய்த சம்பவம்