நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் சூர்யா. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அவர் உருவாக்கினார். இவர் நடித்து வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், சிங்கம் 2 உள்ளிட்ட பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தது.,
ஒருபக்கம் சூர்யா நடிகை ஜோதிகாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அதோடு சூர்யா கடைசியாக நடித்து வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் எடுத்திருக்கிறது..
இந்நிலையில்தான், சூர்யாவின் தம்பி கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 பட டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அந்த விழாவில் சூர்யாவும் கலந்து கொண்டார். அப்போது ‘நீங்கள் மும்பையிலேயே செட்டில் ஆகி விட்டீர்களா?’ என்று கேள்வி கேட்கப்பட்டது..
அதற்கு பதில் சொன்ன சூர்யா ‘நிறைய பேருக்கு அந்த குழப்பம் இருக்கு.. நான் இங்கேதான் சென்னையில் இருக்கேன்.. நான் சென்னைகாரன்தானே.. மும்பை அவ்வப்போது போயிட்டு வரேன்’ என்று பதில் அளித்தார்.
மேலும் சர்தார் 2 டிரெய்லர் வீடியோவை பார்த்தபோது ‘இது மித்ரன் படம்தானா அல்லது நமது படமா’ என எனக்கு தோன்றியது. கார்த்தி நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். படம் சிறப்பாக உருவாகியிருக்கிறது.. பட குழுவுகு என் வாழ்த்துக்கள்’ என சூர்யா பேசினார்.







