OMG! ஏமிக்கு இவ்ளோ பெரிய பையனா? கூடவே காதலருடன் உல்லாசம் வேற.. மஜாதான்..வைரலாகும் புகைப்படம்

amy
Actress Amyjackson:லண்டன் அழகியான ஏமி ஜாக்சன் தமிழில் ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மதராசபட்டணம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் ஹீரோயினாக அறிமுகமான ஏமிஜாக்சன் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் கவர்ந்தார். தமிழ் தெரியாது என்றாலும் தமிழ் மக்களிடையே இவருக்கு என ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்கிறது.
இவர் நடித்தது சில படங்களே ஆனாலும் அந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களாகவே அமைந்திருக்கின்றன. மதராசபட்டணம், எந்திரன், ஐ போன்ற படங்களில் இவருக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாகவே தான் அமைந்திருக்கின்றன. தெறி படத்திலும் கேரளா டீச்சராக வந்து விஜய்க்கு ஜோடியாவதும் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

amy
இதையும் படிங்க: சொப்பன சுந்தரியை யாரு வச்சிருக்கா?!.. பிரேம்ஜி கல்யாண விஷயத்தில் கடுப்பான வெங்கட்பிரபு…
அதன் பிறகு தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வரும் ஏமி ஜாக்சன் தன் காதலருடன் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார்.
அதன் மூலம் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்த பிறகும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் ஏமிஜாக்சன். இந்த நிலையில் அவருடைய குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் அவருடைய குழந்தை மிகப்பெரிய பையனாக வளர்ந்து நிற்பதை பார்க்க முடிகிறது.

amy1
இதையும் படிங்க: சிவாஜி குடும்பத்துக்கு தோல்வி!.. அஜித் கொஞ்சம் கூட நன்றி இல்லாதவன்!.. கொந்தளிக்கும் பிரபலம்..
கூடவே அவருடைய காதலனும் உடன் இருப்பது தெரிகிறது. அது மட்டுமல்லாமல் அந்த காதலருடன் ஏமிஜாக்சன் லிப் டு லிப் கிஸ் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். ஏற்கனவே முன்னாள் காதலரை பிரிந்து வாழ்ந்து வந்த ஏமி ஜாக்சன் வேறு ஒரு நடிகருடன் டேட்டிங் செய்து வருவதாக ஒரு செய்தி வெளியானது. ஒருவேளை அந்த நடிகர் தானா இது என்பது சரியாக தெரியவில்லை. இருந்தாலும் இந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்டு ஏமிஜாக்சன் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.