Cooku with Comali Sesaon 7: குக் வித் கோமாளி சீசன் 7 : நடுவராகக் களமிறங்கும் நடிகை ரோஜா…

X
Cooku with Comali Sesaon 7: குக் வித் கோமாளி சீசன் 7 : நடுவராகக் களமிறங்கும் நடிகை ரோஜா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ரியஃலிட்டி ஷோக்களில் ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி இடம் உண்டு. வழக்கமான சமையல் நிகழ்ழியாக இல்லாமல் முழுக்க முழுக்க காமெடியாக கொண்டு செல்லப்படும் இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக 6 சீசன்களைக் கடந்து சீசன் 7-ஐ தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் குக் வித் கோமாள் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரமோ இன்று வெளியானது. இந்த புதிய சீசனில் புதிய அப்டேட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், மற்றும் செஃப் கௌஷிக் ஆகியோருடன் இணைந்து, 4-வது நடுவராகப் பிரபல முன்னணி நடிகை ரோஜா களம் இறங்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியான புதிய ப்ரோமோவில் அறிவிக்கப்பட்டது.

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரோஜா, தெலுங்குத் தொலைக்காட்சிகளிலும் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடதக்கது.