Dhanush: அப்பாடா.. தனுஷுக்கு ஆதரவாக இறங்கிய நடிகை! கண்மூடித்தனமா எதையும் நம்பாதீங்க பாஸ்

Published on: November 16, 2024
dhanush
---Advertisement---

Dhanush: தற்போது தனுஷ் மற்றும் நயன்தாரா பிரச்சனை ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்து வருகிறார்கள். நாளை மறுநாள் நயன்தாராவின் ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் வெளியாக இருக்கிறது.

அதில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சி மற்றும் பாடலை பயன்படுத்த தனுஷ் தரப்பில் இருந்து என்ஒசி வழங்கப்படவில்லை. அதற்காக இரண்டு வருட காலம் காத்திருந்ததாகவும் ட்ரெய்லரில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தின் காட்சி பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாகவும் இது தனுஷ் எப்படிப்பட்டவர் என்பதை  வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது என இன்று நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நடிகை நயன்தாரா…! அதுவும் எதுக்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!

இவருக்கு ஆதரவாக பல நடிகைகள் இன்ஸ்டாவில் தனுஷுக்கு எதிராக பதிவிட்டு வந்தனர்.  ஸ்ருதிஹாசன், அனுபமா, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ்,மஞ்சிமா மோகன் என தனுஷுடன் நடித்த நடிகைகள் அத்தனை பேருமே நயன்தாராவுக்கு ஆதரவாக தங்களுடைய பதிவை பதிவிட்டு வந்தனர்.  ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷ் நயன்தாரா பதிவிட்ட அறிக்கைக்கு முதலில் லைக் கொடுத்து அதன் பிறகு அதை டிஸ்லைக் செய்துள்ளார்.

aishu
aishu

இது ஏனென்று தெரியவில்லை. ஆனால் இதை பார்த்த நெட்டிசன்கள் தனுஷுக்கு ஆதரவா இந்த ஒரு நடிகையாவது இருக்காங்களே? ஒரு பிரச்சனை பூகம்பம் ஆகும்போது இரு தரப்பு நியாயத்தையும் நாம் பார்க்க வேண்டும். தனுஷ் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக நயன் போட்ட அறிக்கையை நியாயப்படுத்துவது சரியானதாக இல்லை. இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி இதை சுமூகமாக முடிப்பதே சிறந்தது என ரசிகர்கள் கமெண்ட்களை கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: வேட்டையனுக்கு பயந்து அமரன் கிட்ட மாட்டிகிட்டீங்களே பங்கு?!… கேப்பே விடாமல் அடிக்கும் பிரபலம்!…

ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்திருந்தார். அவர் திடீரென என்ன நினைத்தாரோ தெரியவில்லை. போட்ட லைக்கை டிஸ் லைக் செய்துள்ளார்.