ஷாலுமாதான் என் உலகம்! வேற எதுவும் இல்லடா.. வைரலாகும் அஜித் – ஷாலினி புகைப்படம்

Published On: January 23, 2024
shalini
---Advertisement---

Actor Ajith: அஜித்தை பற்றிய விமர்சனங்கள் சமீபகாலமாக இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. அஜித் இப்படி இருப்பது சரியில்லை என்றும் அவர் ஒரு வேற்றுக்கிரகவாசி என்றும் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இப்படியா ஒரு மனிதர் இருப்பார் என்றும் பலவகையான விமர்சனங்கள் அவர் மீது முன்வைக்கப்படுகின்றன.

அதுவும் விஜயகாந்த் இறந்ததில் இருந்தே கேப்டன் ரசிகர்களில் இருந்து அஜித் ரசிகர்கள் உட்பட அஜித்தை கடுமையாக சாடி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விஜயகாந்தின் உடலுக்கு நேரடியாக இறுதி அஞ்சலில் செலுத்த வராதவர்கள் அவர் நினைவிடத்திற்கு வந்தாவது அவர்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

இதையும் படிங்க: புரடெக்‌ஷன் சாப்பாட்டில் இப்படி ஒரு விபரீதம் நடந்ததா? அஜித் செய்த முதல் வேலை என்ன தெரியுமா?

ஆனால் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாகியும் இன்னும் அஜித்தோ அல்லது ஷாலினியோ விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்த வராதது கடைமட்ட ரசிகர்களை கூட கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அஜர்பைஜானில் விடாமுயற்சி பட சூட்டிங்கில் இருக்கும் அஜித்தின் புகைப்படமும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி இன்னும் ரசிகர்களை வெறுப்புக்குள்ளாக்கி வருகிறது.

shalini
shalini

அதாவது அஜித் பார்ட்டியில் இருக்கும் மாதிரியான புகைப்படம், அவர் டான்ஸ் ஆடுவது மாதிரியான வீடியோ என அடுத்தடுத்து வெளியாகி அஜித் மீதிருந்த மரியாதையையே கெடுத்துவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் அஜர்பைஜானில் ஷாலினியும் அஜித்தும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதையும் படிங்க: எனக்கு 19 கோடி ஓட்டு வர இதான் காரணம்!… நான் பிஆர்லாம் வைக்கல… நச்சென பதில் சொன்ன அர்ச்சனா!…

இந்த போட்டோவை ஷாலினி செல்ஃபியாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது அந்த புகைப்படத்தை பார்த்தாலே தெரிகிறது. இருந்தாலும் எங்கு போகவேண்டும், வரவேண்டும் என்பது அவரவர் விருப்பம். அஜித்தை பொறுத்தவரைக்கும் தன் குடும்பம், தொழில் என இருக்கும் ஒரு மனிதர் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்.