அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் விஜய்!... வெறுப்பில் அசிங்கப்படுத்த களமிறங்கும் அஜித்

by Akhilan |
அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் விஜய்!... வெறுப்பில் அசிங்கப்படுத்த களமிறங்கும் அஜித்
X

Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் அரசியலுக்கு செல்ல இருக்கிறார் என்ற தகவல் தற்போது காட்டுத்தீயாக பரவி வருகிறது. சிலருக்கு இதில் கடுப்பு இருந்தாலும் பலர் அவருக்கு ஆதரவு தருவதாகவே தெரிகிறது. இதில் அவரின் முன்னணி போட்டியில் இருக்கும் அஜித்துக்கு ஏகபோக கடுப்பு என்றே சொல்லப்படுகிறது.

பொதுவாகவே வெளியுலகத்துக்கு வராமல் அசலுக்கு பின்னர் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அவரின் ஒரு பட அப்டேட்டுக்கே ரசிகர்கள் தவம் இருக்கும் நிலை தான். அப்படி இருக்க அவரின் போட்டி நாயகனான விஜய் தன்னுடைய மாஸை அவ்வப்போது நிரூபித்து விடுகிறார்.

இதையும் படிங்க: ரஜினியுடன் 17 முறை மோதிய விஜயகாந்த் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?..

சமீபத்தில் கூட தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கியது. டாப் மார்க் எடுத்து மாணவர்களுக்கு பரிசு வழங்கியது, விஜயகாந்த் இறப்பில் அத்தனை கூட்டத்துக்குள் வந்து அஞ்சலி செலுத்தியது என தனியாக ஸ்கோர் செய்து கொண்டு இருக்கிறார். இதில் எல்லா விஷயத்திலையுமே அஜித் அடிப்பட்டு போகிறார்.

இருந்தும் விஜயின் அரசியல் விவரம் ஒவ்வொன்னாக கசிய அஜித் இந்த பக்கம் மீண்டும் பொதுவெளி பக்கம் தலைக்காட்ட துவங்கிவிட்டார். கிட்டத்தட்ட அவரின் சமீபத்திய புகைப்படங்கள் தினமும் வரிசையாக வெளி வருகிறது. முன்பெல்லாம் ஒரு படம் தெளிவில்லாமல் கிடைக்கும். ஆனால் இந்த வாரமே மாடலிங்கில் போஸ் கொடுப்பது போல அஜித்தின் எக்கசக்கமான படங்கள் தொடர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

கண்டிப்பாக இது அஜித்தின் அனுமதி இல்லாமல் வெளிவர முடியாது. அவர் ஒப்புதலுடன் தான் வந்து இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் அஜித்தின் பிஆர்ஓ சுகேஷ் சந்திரா புகைப்படங்களை ரிலீஸ் செய்து விட்டு இது விளம்பரம் இல்லை எனச் சொல்லிவிட்டார். அதுவும் ரசிகர்களிடம் கடுப்பை கிளப்பி இருக்கிறது.

கிட்டத்தட்ட விஜயின் அரசியல் எண்ட்ரியில் அஜித் கொஞ்சம் கடுப்பில் இருக்கிறார். உண்மையாக அவர் மீது போட்டியில் தான் உள்ளார் என்று பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். அப்படி உண்மையில் அவரை ஜெயிக்க நினைத்தால் நேராக வந்து போட்டி போடுங்கள். ஏன் இந்த முகமூடி? நீங்களும் கதை சொல்லி கைத்தட்டை வாங்கி கொள்ளுங்களேன் என கடுப்பாகி பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Next Story