இந்த முறை யூத் நடிகருடன் கை கோர்த்த சிறை அக்ஷய் குமார்…பூஜையுடன் ஆரம்பம்
சிறை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் நடிகர் LK அக்ஷய் குமார். முதல் படத்திலிஏயே இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது இவர் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் […]

சிறை படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரபல தயாரிப்பாளர் லலித் குமாரின் மகன் நடிகர் LK அக்ஷய் குமார். முதல் படத்திலிஏயே இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
தற்போது இவர் நடிக்கும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கோணங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வரும் LK அக்ஷய் குமாரின் அடுத்த படைப்பாக இப்படம் உருவாகிறது. கிரைம் ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் அக்ஷய் குமார் தந்தை S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை விழாவில் இயக்குநர்கள் H. வினோத், சிறுத்தை சிவா, துரை செந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல், தயாரிப்பாளர்கள் R. K. செல்வமணி, T. சிவா, G. தனஞ்செயன், ஃபைவ் ஸ்டார் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இயக்குகிறார். இவர் இயக்குநர் H. வினோத்த்தின் உதவி இயக்குநராக பணியாற்ற்றியவர். H.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை , வலிமை மற்றும் ஜனநாயகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள விஷ்ணு அமரன், தற்போது இயக்குநராக இப்படத்தில் பணியாற்ர்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
சிறை படத்தை அடுத்து அக்ஷய் குமார் நடிப்பில் ராவடி என்ற படம் விரைவில் வெளியாக உளளது என்பது குறிப்பிடத்தக்கது.












