ரிலீஸுக்கு முன்பே கின்னஸ் ரெக்கார்ட் படைத்த ராக்கா

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜவான் படத்தை அடுத்து அட்லி இயக்கி வரும் படம் ராக்கா. புஷ்பா2 மூலம் பான் இந்தியா

raaka movie

ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஜவான் படத்தை அடுத்து அட்லி இயக்கி வரும் படம் ராக்கா. புஷ்பா2 மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ள அல்லுன் அர்ஜூன் நடித்தும் இந்த படத்தில் தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தானா, ஜான்வி கபூர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த ப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படம் தற்போது ஒரு விசயத்திற்காக கின்னஸ் ரெக்கார்டை படைத்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் அதிகமான நபர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக இப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது.

இந்த உலக சாதனை கடந்த பிப்ரவரி 2026-ல் நிகழ்த்தப்பட்டது. ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் Motion Capture செய்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய சினிமாவில் புதிய தொழில்நுட்ப சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சாதனைக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் 15 செப்டம்பர் 2026 அன்று வழங்கப்பட்டது.

கின்னஸ் உலக சாதனைக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர் வழங்கினார். படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இது குறித்து அல்லு அர்ஜூன் கூறுகையில், இது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம். இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து எங்களது முயற்சிகளை கௌரவித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு நன்றி. எனது இயக்குநர் அட்லீயின் தொலைநோக்கு பார்வையும் வழிகாட்டுதலும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் அசாத்திய உழைப்பும் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது. இவ்வளவு பிரம்மாண்டமான கனவுடன் உருவாகும் இந்தப் படைப்பிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி என்றார்.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →