சண்டைக்காட்சிகளில் கூட உள்ளடைகளுடன் நடிக்கச் சொல்கிறார்கள்.. ராதிகா ஆப்தே வேதனை
இந்திய திரையுலகில் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே .

இந்திய திரையுலகில் வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ராதிகா ஆப்தே . தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள இவர், கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும், சவாலான வேடங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா, ரத்த சரித்ரம் , ரஜினியுடன் கபாலில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று வைரல் ஆகியுள்ளது. ஆரம்பகாலத்தில் தான் நடித்த நான்கைந்து படங்களில் கிளாமர் காட்சிகளில் நடித்ததாகவும், அதனால் தொடர்ந்து இதுபோன்ற காட்சிகளில் நடிக்கத் தயாராக இருப்பார் என்று சிலர் தவறாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ராதிகா ஆப்தே, நான் ஏற்கெனவே இதுபோன்ற காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்பதால், மீண்டும் எதையும் செய்ய சம்மதித்துவிடுவேன் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அந்த காட்சி கதைக்கு ஏன் தேவை என்பதை நான் கேட்பேன். சண்டைக்காட்சியில் நடிக்கும்போது சட்டையின் பட்டன்களை போடாமல் நடிக்க முடியுமா என்று முதலில் கேட்டதாகவும், பின்னர் உள்ளாடையுடன் அந்த சண்டைக்காட்சியில் நடிக்க முடியுமா எனக் கேட்டனர். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது அவரது நடிப்பில் Lust Stories 3 வெளியாகியுள்ளது. 2026 செப்டம்பர் 18-ம் தேதி வெளியான இந்த ஆந்தாலஜி திரைப்படத்திலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார்.












