குறும்படம் தயாரிப்பதாகக் கூறி ரூ.5 லட்சம் மோசடி.. பிக்பாஸ் பிரபலம் கைது!

குறும்படம் தயாரிப்பதாகக் கூறி இளைஞரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தெரிவித்த தகவலின்படி, குறும்படம் ஒன்றை தயாரிப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இளைஞரிடம் வர்ஷினி வெங்கட் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த இளைஞர் ரூ.5 லட்சம் வழங்கியதாகவும், பின்னர் குறும்படம் தொடர்பாக எதிர்பார்த்தபடி பணிகள் நடைபெறாத நிலையில், […]

varshini venkat

குறும்படம் தயாரிப்பதாகக் கூறி இளைஞரிடம் இருந்து ரூ.5 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் தெரிவித்த தகவலின்படி, குறும்படம் ஒன்றை தயாரிப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட இளைஞரிடம் வர்ஷினி வெங்கட் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக அந்த இளைஞர் ரூ.5 லட்சம் வழங்கியதாகவும், பின்னர் குறும்படம் தொடர்பாக எதிர்பார்த்தபடி பணிகள் நடைபெறாத நிலையில், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரூ.5 லட்சத்தை திருப்பித் தருமாறு இளைஞர் கேட்ட நிலையில், அவரை பேசுவதற்காக அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்படி கிண்டி பகுதியில் அவரை சந்தித்தபோது, பணம் தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது அந்த இளைஞரை தாக்கியதாகவும், அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வர்ஷினி வெங்கட் மற்றும் மேலும் 3 பேர் மீது மோசடி மற்றும் பறிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட வர்ஷினி வெங்கட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு 7 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட மற்ற நபர்களின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த வர்ஷினி வெங்கட்?

வர்ஷினி வெங்கட், பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர். அவர் அந்த நிகழ்ச்சியில் சுமார் மூன்று வாரங்கள் இருந்த பின்னர் வெளியேறினார். இதனை தொடர்ந்து சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார். சொட்ட சொட்ட நனையுது திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு 2025 ஆகஸ்ட் 29-ஆம் தேதி வெளியானது. தற்போது குறும்படம் தயாரிப்பதாகக் கூறி பணம் பெற்றது தொடர்பான புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →