Connect with us
sethu

Cinema News

விஜய் சேதுபதி ரூட்டுதான் பெஸ்ட்! பிரபல நடிகருக்கு வில்லனாகும் ஆர்யா.. அதுக்குதான் இந்த வொர்க் அவுட்டா?

Actor Arya: தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக கருதப்படுபவர் நடிகர் ஆர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் மலையாளம் தெலுங்கு போன்ற படங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார் ஆர்யா. இவர் நடித்த படங்களில் அறிந்தும் அறியாமலும் ,பட்டியல் போன்ற படங்கள் முக்கிய படங்களாக அமைந்தன.

இந்த இரு படங்களில் அவருடைய முரட்டும் தனமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு பாலா இயக்கத்தில் வெளிவந்த நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்து விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டைப் பெற்றார் ஆர்யா.

இதையும் படிங்க: கில்லிக்கே சல்லியாயிட்டாங்க! இதுல அந்தப் படமா? விஜய் பிறந்தநாளில் ரி ரிலீஸாகப் போகும் படம்

லவ்வர் பாயாக இருக்கும் ஆர்யா இப்படியும் நடிப்பாரா என்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது நான் கடவுள் திரைப்படம் .அதன் பிறகு ஒரு டைட்டானிக், அலைபாயுதே போன்ற படங்களின் வரிசையில் மதராசபட்டினம் என்ற காதல் கதையை மையமாக வைத்து அமைந்த படத்தில் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இவருக்கே உரிய பாணியில் அதாவது காமெடி ஜோனில் வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .இப்படி இன்றுவரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பல படங்களில் நடித்திருக்கும் ஆர்யா சமீபகாலமாக சைக்கிள் ரைடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இளைஞர்களுக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாகவும் இருந்து வருகிறார்.

இதையும் படிங்க: 80ஸ் மட்டுமல்லாம 2கே கிட்ஸ்களையும் தட்டிதூக்கிய டி.ராஜேந்தர்… யாருமே அறியாத அந்த சில தகவல்கள்

சமீபத்தில் கூட போலந்து நாட்டில் அது சம்பந்தமான ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்காக சூர்யாவிடம் வாழ்த்து பெற்ற ஒரு புகைப்படம் வெளியானது. சில ஆண்டுகளாக தோல்வி படத்தையே கொடுத்து வந்த ஆர்யாவுக்கு சார் பட்டா பரம்பரை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பாராட்டை பெற்றது.

அந்த படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கு இடையில் ஆரியா திடீரென வில்லன் அவதாரம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ஒரு படத்தில் தினேஷுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

இதையும் படிங்க: மனுஷன் இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காரே!.. கோட் படத்துல அதையும் முடிச்சிட்டாராம்!.. என்னதான் பிளான்!..

தங்கலான் படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தை தொடங்கலாம் என பா ரஞ்சித் காத்திருந்த நிலையில் தங்கலான் தேதி தள்ளிக்கொண்டே போவதால் இந்த படத்தை ஆரம்பித்து விடலாம் என வெகு சீக்கிரமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க இருக்கிறார்களாம் .அதற்காக ஆர்யாவும் தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top