Cinema News
விவகாரமான ரம்பா பேட்டி!.. வேட்டையன் படத்தில் கரன்ட் கட் ஆகிடப் போகுது.. புளூ சட்டை மாறன் தாக்கு!..
அருணாச்சலம் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார் ரம்பா. அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் அவர் ரஜினிகாந்த் உடன் நடிக்கவே இல்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அருணாச்சலம் பட சமயத்தில் நடந்த சில சுவாரஸ்ய விஷயங்களை சொல்ல மறைமுகமாக ரஜினிகாந்தை அம்பலத்துக்கு கொண்டு வந்து விட்டார் ரம்பா என்றே விஜய் ரசிகர்கள் கட்டம் கட்ட ஆரம்பித்து விட்டனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவருமே நட்பும் மரியாதையும் பாராட்டி வரும் நிலையில், அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சண்டை போட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பழைய குப்பைகளை கிளறும் விஜய், ரஜினி ரசிகர்கள்.. ஜகபதி பாபு சொன்ன கீர்த்தி சுரேஷ் மேட்டர் வைரல்!..
சமீபத்தில், ரம்பா அளித்த பேட்டியில் சல்மான் கானை கட்டிப் பிடித்து வணக்கம் சொன்னதை பார்த்து ரஜினி கடுப்பாகி விட்டார் என்றும் திரும்ப செட்டுக்கு வந்த போது அவர் டென்ஷனில் கத்தி டிராமா போட்டதில் நான் அழுதே விட்டேன். பின்னர் என்னை சமாதானப்படுத்தினார் ரஜினிகாந்த் என்றார்.
மேலும், ஒரு நாள் ஷூட்டிங்கின் போது திடீரென லைட் ஆஃப் ஆகி விட்டது. அப்போது யாரோ என் முதுகில் தட்டிவிட்டு சென்றனர். உடனே அலறி விட்டேன். மீண்டும் கரன்ட் வந்ததும் ரம்பா பின்னாடி தட்டினது யாருடான்னு ரஜினி சார் டிராமா போட்டார் என ரம்பா அந்த பேட்டியில் பேசியது தற்போது சோஷியல் மீடியாவில் மீடூ விவகாரமாகவே மாறி விட்டது.
இதையும் படிங்க: இந்த நடிப்பை ஊர் நம்பாதுடா.. செருப்பால் அடிக்கும் போட்டோவை போட்டு நடிகர்களை அசிங்கப்படுத்திய ப்ளூ சட்டை!
ரஜினிகாந்த் முதுகில் தட்டினார் என்பது ரஜினி என் பின்னாடி தட்டினார் என மாற்றப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில், அதை கிண்டல் செய்யும் விதமாக ப்ளூ சட்டை மாறன், “வேட்டையன் படப்பிடிப்பில் தலீவருடன் காம்பினேஷன் காட்சிகளில் நடிக்கும்போது தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குமாறு முன்னணி மற்றும் துணை நடிகைகள் கோரிக்கை வைக்கவுள்ளதாக தகவல்.” என ட்வீட் போட்டுள்ளார்.