புது முயற்சியில் அசத்திய பெருசு... 3வது நாளில் பட்டையைக் கிளப்பிய வசூல்!

by sankaran v |
புது முயற்சியில் அசத்திய பெருசு... 3வது நாளில் பட்டையைக் கிளப்பிய வசூல்!
X

கடந்த வாரம் வெளியான படங்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெருசு படம் சக்கை போடு போட்டு வருகிறது. இது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. அடல்ட்ஸ் ஒன்லி படம் என்றாலும் அதை எடுத்திருக்கும் விதம் மற்ற படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. விரசம் சொல்லும்படியாக இல்லை. முழுக்க முழுக்க காமெடி தான். படத்தின் பலம் பாசிடிவான விமர்சனங்கள் தான். ஆனால் பெருசு படம் முதல் நாள் வசூலை விட அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.

படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் கூட துளியும் விரசம் இல்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் இளங்கோ ராம். குறும்படமாக எடுக்க வேண்டிய விஷயத்தை இவர் முழுக்க கலகலப்பான முழுநீளப் படமாக எடுத்து இருக்கிறார். பெண்களும், குடும்பத்தினரும் பார்க்கும் வகையில் படம் எடுக்கப்பட்டு இருப்பதுதான் படத்தின் தனிச்சிறப்பு. படத்தில் எந்தவிதமான ஆபாசமோ, ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளோ படத்தில் இல்லை. இதனால் படம் குடும்பத்துடன் பார்த்து குதூகலிக்கும் படமாக மாறி விட்டது.

படத்தில் வைபவ் அவரது அண்ணன் சுனில் உடன் இணைந்து நடித்துள்ளார். இருவரும் பேசும் காமெடி டயலாக்குகள் செமயாக ஒர்க் அவுட் ஆகியுள்ளன. பால சரவணன், விடிவி கணேஷ், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, முனீஷ்காந்த், தீபா ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் பாலசரவணன் ரசிகர்களை ரொம்பவே கவர்கிறார்.

நடிகர்கள் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்திருக்கும் நடிகைகளும் படத்தை ரசித்து அனுபவித்து காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் சில சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் மனதை வருடுகிறது. அந்த வகையில் படத்தில் காமெடி மட்டும் இல்லாமல் எமோஷனலாகவும் உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் இதை சிறந்த ஃபீல் குட் படம் என்று சொல்வது படத்தின் பெரிய பிளஸ்.

அவர்கள் சொன்னதுக்கு ஏற்ப படமும் வசூலில் முந்திக் கொண்டுள்ளது. 2நாள் வசூல் விவரம் பாருங்க. நேற்று வெளியான காதல் படங்களை விட வசூலில் பெருசு தான் பெருசாக சாதித்துள்ளது. வாங்க பார்க்கலாம். பெருசு படத்தின் முதல் நாள் இந்திய அளவில் கலெக்ஷன் 53 லட்சம். 2வது நாளில் 80 லட்சம். 3வது நாளில் 59 லட்சம். ஆக மொத்தம் 1.92 கோடி.

Next Story