2வது நாளிலேயே சரிந்த தக் லைப் வசூல்!.. மீம்ஸ் போட்டே முடிச்சி விட்டாங்களே!..

Published on: August 8, 2025
---Advertisement---

Thuglife collection: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான தக் லைப் திரைப்படம் கடந்த 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. தமிழில் இருந்துதான் கன்னட மொழி உருவானது என கமல் பேசியதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்ப்பு தெரிவித்ததால் கர்நாடகாவில் மட்டும் இப்படம் வெளியாகவில்லை.

கர்நாடகாவில் ஒரு வாரத்திற்கு பின் வெளியிடுவோம் என கமல் சொல்லியிருந்தார். ஆனால், படத்திற்கும் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை பார்க்கும்போது இனிமேல் அங்கு படம் வெளியாகாது என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில் படம் நன்றாக இல்லை என பலராலும் சொல்லப்படுகிறது.

மணிரத்னமும் கமலும் சொல்ல வந்ததை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா அல்லது அவர்கள் புரிந்து கொள்வது போல மணிரத்னம் சொல்லவில்லையா என்பது புரியவில்லை. மொத்தத்தில் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. ஏனெனில், படத்தில் அழுத்தமான கதையோ, சுவாரஸ்யமான திரைக்கதையோ இல்லை.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் சரியாக இல்லை. ‘இது எதற்காக நடக்கிறது?’ என காட்சியோடு ஒன்றாமலேயே ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள். கமல் சொன்ன கதையை மணிரத்னம் தனது ஸ்டைலில் கொஞ்சம் மாற்றி எடுத்திருக்கிறார். அது வொர்க் அவுட் ஆகவில்லை.

படம் வெளியான 5ம் தேதி இப்படம் இந்தியாவில் 15.5 கோடி வசூல் செய்தததாக சொல்லப்பட்டது. 2ம் நாளான நேற்று இப்படம் வெறும் 7.50 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. அதேநேரம், வெளிநாடுகளில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மேலும், சனி, ஞாயிறு வார இறுதி என்பதால் கொஞ்சம் வசூலை பெற வாய்ப்பிருக்கிறது.

அதேநேரம் எப்படி பார்த்தாலும் இப்படம் மணிரத்னத்திற்கும், கமலுக்கும் ஒரு தோல்விப்படமாக அமையும் என சொல்லப்படுகிறது. ஏனெனில், இருவரும் இணைந்துதான் இப்படத்தை தயாரித்துள்ளனர். கண்டிப்பாக தக் லைப் படம் இருவரும் நஷ்டத்தையே கொடுக்கும் என கணிக்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment