Connect with us

15 வருடங்களில் 3 படங்கள் மட்டுமே ஹிட்!… இது என்னடா விண்வெளி நாயகனுக்கு வந்த சோதனை!..

latest news

15 வருடங்களில் 3 படங்கள் மட்டுமே ஹிட்!… இது என்னடா விண்வெளி நாயகனுக்கு வந்த சோதனை!..

Kamalhaasan: 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்தவர் பின்னாளில் பாலச்சந்தரின் இயக்கத்தில் உருவான படங்களில் டீன் ஏஜ் பாயாக நடிக்க துவங்கினார். சின்ன வேடம் என்றாலும் படத்தின் கதையோடு தொடர்புடைய முக்கிமான வேடங்களை கமலுக்கு கொடுத்தார் பாலச்சந்தர்.

அதன்பின் காதல் மன்னனனாக மாறி பல படங்களிலும் ரொமான்ஸ் செய்தும், நடனம் ஆடியும் ரசிகர்களிடம் பிரபலமானார் கமல், ஒருகட்டத்தில் மாற்று சினிமாவின் பக்கம் அவருக்கு ஆர்வம் சென்றது. தமிழ் சினிமா மற்றும் ரசிகர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என மெனக்கெட்டு பல பரிசோதனை முயற்சிகளை செய்தார்.

மகாநதி, குருதிப்புனல், குணா, ஹேராம் போன்ற எல்லாமே கமல் அப்படி முயற்சி செய்த படங்கள்தான். இந்த படங்கள் கமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் வணிகரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் கமலுக்கு நஷ்டம் ஆனாலும் அவர் மாறவில்லை. தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

2 நாட்களுக்கு முன்பு வெளியான தக் லை படமும் இப்படித்தான். நாயகன் படத்தின் இன்னொரு வெர்ஷனாக இப்படம் உருவாகியிருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் மீது கொண்ட மோகம் என்பதே படத்தின் பிரதான கதையாக இருப்பதால் படம் ரசிகர்களை கவரவில்லை. அதோடு, கதை, திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே, எதிர்பார்ப்போடு வந்தோம். படம் ஏமாற்றிவிட்டது என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் இந்தியாவில் வெறும் 23 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இப்படம் கண்டிப்பாக கமலுக்கு ஒரு தோல்விப்படமாக அமையவுள்ளது. கடந்த 15 வருடங்களில் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம், பாபநாசம், விக்ரம் 3 படங்கள் மட்டுமே ஹிட் அடித்திருக்கிறது. விஸ்வரூபம் 2, இந்தியன் 2, தக் லைப் ஆகிய படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது. இடையில் கல்கி என்கிற படம் வெற்றி என்றாலும் அதில் கமல் ஒரு சின்ன வேடத்தில் மட்டுமே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top