Connect with us

எஸ்கே, விஜய் ஆண்டனி இடையே பத்திக்கிட்ட பராசக்தி சண்டை… சிம்பிளாக முடிச்சிட்டீங்களே…

latest news

எஸ்கே, விஜய் ஆண்டனி இடையே பத்திக்கிட்ட பராசக்தி சண்டை… சிம்பிளாக முடிச்சிட்டீங்களே…

Parashakthi: சிவாஜி கணேசனின் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற பராசக்தி படத்தின் டைட்டிலுக்காக இரண்டு நாட்களாக சண்டை நடைபெற்று வந்த நிலையில் ஒரு வழியாக அதற்கு தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

நாடக நடிகராக இருந்த சிவாஜி கணேசனின் வாழ்க்கையை மாற்றியது பராசக்தி திரைப்படம். 80 ஆண்டுகள் இன்னமும் அந்த படத்தின் கிளைமேக்ஸை பார்க்கும் ரசிகர்களுக்கு மெய் சிலிர்க்காமல் இருக்காது. அப்படி ஒரு படைப்பாக இன்றளவும் இருக்கிறது.

அந்த பராசக்தி டைட்டிலை எஸ்கே25 படத்திற்கு வைக்கலாம் என தகவல்கள் கசிந்தது. ஆனால், அந்த அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பே பராசக்தி என தன்னுடைய படத்துக்கு விஜய் ஆண்டனி பராசக்தி என்ற டைட்டிலை வைத்து இருந்தார்.

ஆனால் இந்த டைட்டில் மற்ற மொழிகளுக்கு தான் மட்டுமே தவிர தமிழில் இந்த படத்துக்கு சக்தி திருமகன் எனப் பெயர் வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலையே சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடிப்பில் வெளியாகும் படத்துக்கும் பராசக்தி எனப் பெயர் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து பராசக்தி படத்தினை முதலில் இயக்கிய ஏவிஎம் நிறுவனமும் சுதா கொங்கரா மற்றும் டவுன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே தங்களுடைய சப்போர்ட்டை வழங்கினார்கள். இதனால் விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து கடந்த ஆண்டே பராசக்தி டைட்டிலை புக் செய்து விட்டதாக ஆதாரமும் வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து இரு தரப்பும் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டி இருக்கின்றனர். அதாவது சிவகார்த்திகேயனின் படத்துக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் பராசக்தி என்ற பெயரே வைக்கப்பட இருக்கிறது. அதே போல விஜய் ஆண்டனியின் சக்தி திருமகனுக்கு தெலுங்கு தவிர மற்ற மொழிக்கு பராசக்தி என வைத்து கொள்ளலாம்.

தெலுங்கிற்கு விரைவில் வேறு டைட்டிலை படக்குழு அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை இன்று சமூகமாக பேசி விட்டு கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களிடம் வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top