Connect with us

Thuglife: ரிலீஸுக்கு முன்னரே வேகமெடுக்கும் தக் லைஃப் வசூல்… ப்ரீ புக்கிங்கிலே இத்தனை கோடியா?

latest news

Thuglife: ரிலீஸுக்கு முன்னரே வேகமெடுக்கும் தக் லைஃப் வசூல்… ப்ரீ புக்கிங்கிலே இத்தனை கோடியா?

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக நாளை வெளியாக இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் வசூல் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் ஏழாவது சீசனில் தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து படத்தில் ஏகப்பட்ட மாற்றங்களுடன் படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி விட்டது.

முதலில் கமலுடன் ரவி மோகன், துல்கர் சல்மான் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் பெரிய ஆச்சரியம் இருக்கப்படவில்லை. இருந்தும் படத்தின் ஷூட்டிங் தள்ளி போய் கொண்டே இருந்ததால் துல்கர் படத்தில் இருந்து விலகினார்.

அவரை தொடர்ந்து சிம்புவை உள்ளே அழைத்து வர பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருந்த நிலையில், முன் பகை காரணமாக ரவி மோகனும் படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சிம்புவை முன்னிலைப்படுத்தி கதையில் சில மாற்றங்களும் செய்யப்பட்டதாம்.

பெரிய அளவில் ஷூட்டிங் செய்யப்பட்டு படத்தின் ரிலீஸ் நாளை திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எல்லா பாடல்களுமே ஏற்கனவே ரசிகர்களிடம் வெற்றி பெற்று விட்டது. 38 வருடம் கழித்து நாயகனுக்கு பின்னர் தற்போது கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி என்பது வேறு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாகவே படக்குழு புரோமோஷனில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஒரு மேடையில் கமல்ஹாசன் கன்னடம் தமிழில் இருந்து பிறந்ததாக பேச அது தற்போது பெரிய சிக்கலாக பிரச்னையுடன் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ப்ரீ ரிலீஸ் புக்கிங் வசூல் விவரம் வெளியாகி இருக்கிறது. உலகளாவில் இதுவரை 20 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் மட்டும் 50 லட்சத்தினை வசூல் கடந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top