யாருக்கும் தெரியாம தொடர்ந்து 4 வருஷம் அஜித் செஞ்ச அந்த விஷயம் – ரகசியத்தை உடைத்த மனு ஆனந்த்

விஷ்ணு விஷால் நடித்த FIR படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் மனு ஆனந்த். முதல் படமே விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு

manu anand ajith

விஷ்ணு விஷால் நடித்த FIR படம் மூலம் அறிமுகம் ஆனவர் இயக்குனர் மனு ஆனந்த். முதல் படமே விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன் மனு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணை இயக்குனராகவும், நிர்வாக தயாரிப்பாளராகவும்,என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, , எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் போன்ற பல படங்களில் பணியாற்றினார்.

தற்போது ஆர்யா, கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சு வாரியர் நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகியது. இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைதுறையினரும். ஆங்கில படத்திற்கு நிகராக இருப்பதாக பாராட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இயக்குனர் மனு ஆனந்த் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கிஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், நான் மெல்பர்னில் இருந்தபோது ஒரு கட்டயத்தில் இந்தியா வர வேண்டிய சூழ்நிலை. காரணம் எனது தந்தையும், தம்பியும் இரண்டு மாத கால இடைவெளியில் இறந்தனர். என் தம்பி உயிரிழக்கும் முன் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நீ நிச்சயம் சினிமா எடுக்க வேண்டும் . அதை நான் பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தார். அதன் பின்னர்தான் நான் சினிமாவில் நுழைய முயற்சித்தேன். என் தம்பி நினைவாக நானும் என் அம்மாவும் சேர்ந்து ஒரு பவுண்டேசன் ஒன்றை தொடங்கினோம். அதன்மூலம் வயதானவர்கள் , கண் பார்வை இல்லாதாவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்தோம்.

ajith

என்னை அறிந்தால் சூட்டிங் தொடங்கி ஒரு 10 நாட்கள் இருக்கும். அஜித் சார் திடீரென என்னை கேரவனுக்கு அழைத்தார். உள்ளே சென்றதும் ரூ 5 லட்சத்திற்கு ஒரு செக்கை கொடுத்தார். அதனை கொடுக்கும்போது எனக்கு தெரியும் உன் வாழ்கையில் ஏதோ நடந்திருக்கு என்பதும் தெரியும், ஏதோ நல்ல காரியம் செய்கிறாய் என்றும் தெரியும். இந்த தொகையை வைத்துக்கொள் என்றார். என்னிடம் வேறு எந்த விபரமும் கேட்கவில்லை. என்னை அறிந்தால் படமும் முடிந்தது. எனக்கும் அஜித் சாரிடம் பெரிதாக தொடர்பும் இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தவறாமல் ரூ 5 லட்சத்திற்கான செக்கை கொடுத்து விடுவார். தொடர்ந்து 4 ஆண்டுகள் கொடுத்தார். அந்த பவுண்டேசன் நிறுத்தியதை நான் அஜித் சாரிடம் கூறிய பிறகே பணம் கொடுப்பதை நிறுத்தினார் என்று கூறினார்.

நடிகர்களில் அஜித் அதிக உதவிகள் வெளியில் தெரியாமல் செய்து வருகிறார் என்று கூறுவார்கள். அதற்கு இது ஒரு சிறு உதாரணமே.

CR
ஆசிரியர்

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி [email protected]

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →