ரெட்டுக்கு முன்னாடி இயக்கிய படம் ரிலீசே ஆகல… வருத்தத்தில் சிங்கம்புலி!

சிங்கம்புலி இயக்கிய முதல் படம் ‘ரெட்’.

Red Singampuli

‘மாயாண்டி குடும்பத்தார், தேசிங்கு ராஜா, டான்’ போன்ற படங்களில் காமெடி நடிகராக வலம் வந்தவர் சிங்கம்புலி. இவர் ரெண்டு முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் இயக்கியிருக்கிறார்.

ஒன்று ‘தல’ அஜித்குமாரை வைத்து ‘ரெட்’. இன்னொரு படம் ‘தி ஒன்’ சூர்யாவை வைத்து ‘மாயாவி’. ஆரம்பத்தில் சுந்தர்.சியிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் சிங்கம்புலி.

சமீபத்தில், இயக்குநரும், நடிகருமான சிங்கம்புலி கொடுத்த பேட்டியில் “நான் சுந்தர்.சி சார் கிட்ட வொர்க் பண்ணும்போது, அவர் நிறைய படங்கள் கார்த்திக் சாரை வச்சு பண்ணார்.

அது மூலமா எனக்கு கார்த்திக் சாரும் நல்ல பழக்கம் ஆயிட்டாரு. ஒரு நாள் சுந்தர்.சி சாரே கார்த்திக் சார்கிட்ட, சிங்கம்புலி ஒரு நல்ல கதை வச்சிருக்கான் கேளுங்கன்னு சொன்னாரு.

‘அத்தை மகன்’-ன்னு ஒரு கதை சொல்லி அவருக்கு பிடிச்சு போய் பண்றேன்னு சொல்லிட்டாரு. ‘வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம் தயாரிப்புல அதோட ஷூட்டிங்லாம் ஆரம்பிச்சு 90 சதவீதம் முடிஞ்சது. ஆனா, ஒரு சின்ன காரணத்துனால அந்த படம் டிராப்பாயிருச்சு. அப்புறம் தான் அஜித் சாரை வச்சு ‘ரெட்’ பண்ணுனேன்” என்று கூறியுள்ளார்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →