கார்த்திக்கு ஃபர்ஸ்ட்டே சம்பளத்தை கொடுத்துட்டு, 39 நாட்களில் படத்தை முடித்த தயாரிப்பாளர்!
கார்த்திக் நடிப்பில் வெளியான படம் ‘பாண்டிநாட்டு தங்கம்’.

ஒரு காலத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக்கிற்கு மிகப் பெரிய ஃபேன் ஃபாலோயிங் இருந்தது. அப்போது கார்த்திக் நடித்து 1989-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் ‘பாண்டிநாட்டு தங்கம்’.
இதை இயக்குநர் டி.பி.கஜேந்திரன் இயக்கினார். இதில் நவரச நாயகனுக்கு ஜோடியாக நிரோஷா நடித்திருந்தார். இந்த படத்தை சங்கிலி முருகனின் ‘மீனாட்சி ஆர்ட்ஸ்’ நிறுவனம் தான் தயாரித்திருந்தது.

சமீபத்தில், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் கொடுத்த பேட்டியில் கார்த்திக் குறித்து பேசுகையில் “‘பாண்டிநாட்டு தங்கம்’ ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே கார்த்திக்கை கூப்பிட்டு, டப்பிங்குக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் பேலன்ஸ் வச்சுட்டு, அவரோட முழு சம்பளத்தையும் கொடுத்தேன்.
இப்படி யாருண்ணே கொடுப்பா?, புதுசா இருக்குன்னு சொன்னாரு. சம்பளத்தை வாங்கிட்டு நீ கரெக்ட்டா நடிச்சு கொடுத்துருன்னு சொன்னேன். நம்ம எப்போ இருந்தாலும் சம்பளம் கொடுக்கப் போறோம். அதை ஃபர்ஸ்ட்டே கொடுத்திடலாமேன்னு கொடுத்தேன்.

அதுக்கப்புறம் தான் ஷூட்டிங் போனோம். ஒரே ஷெட்யூல் தான். 39 நாட்களில் படத்தை முடிச்சோம். கார்த்திக் எதுவும் பேசாம, கரெக்ட்டா நடிச்சு கொடுத்தாரு. அவரை பத்தி மத்தவங்க பல விஷயம் சொன்னாங்க. என்ன பொறுத்தவரைக்கும் கார்த்திக் தங்கம்” என்று கூறியுள்ளார்.







